உலகம்

மியான்மாரில் சனிக்கிழமை மாத்திரம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக் கணக்கான மக்கள் இராணுவத்தினரால் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் பைடென், மியான்மாரில் இராணுவம் நிகழ்த்தி வரும் இந்த வெறிச்செயலும், படுகொலைகளும் மிகவும் ஆத்திரமூட்டுபவை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் ஐரோப்பிய யூனியனும் இந்த படுகொலைகள், வன்முறைகள் எதுவும் சிறுதும் ஏற்றுக் கொள்ளப் பட முடியாதவை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மியான்மார் இராணுவத்தை பிரிட்டன், ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன. மியான்மாரில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டினால் இதுவரை குறைந்தது 423 பேர் பலியாகி இருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை இந்தோனேசியாவில் தெற்கு சுலவேசி மாகாணத்தில் மக்காசர் என்ற இடத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை அனுட்டிப்பு கடைப்பிடிக்கப் பட்டது. இதனால் பெருமளவிலான மக்கள் உள்ளே திரண்டிருந்தனர். 2 ஆவது பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்குள் நுழைய பலர் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

விசாரணையின் போது இருவரும் தமது உடலில் கட்டியிருந்த தற்கொலைக் குண்டை வெடிக்க செய்தனர். இத்தாக்குதலில் இந்நபர்கள் இருவரும் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், மேலும் 20 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்த வெடிகுண்டுத் தாக்குதலால் இந்தோனேசிய மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.