உலகம்

இத்தாலியின் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றுநோய்கள் பரவுவதான புதிய செய்திகளைத் தொடர்ந்து, கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட மறுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மீது, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி அறிவித்துள்ளார்.

மார்ச் 25, வியாழக்கிழமை, லிகுரியா பிராந்தியத் தலைவர் ஜியோவானி டோட்டி அப்பகுதியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் குறைந்தது 12 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

"மருத்துவமனையில் சேர்ப்பது போன்ற பலவீனமான நேரத்தில் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தினைக் கருத்தில் கொண்டு, சட்டபூர்வமான விதிமுறைகளும் அரசியல் ரீதியான நடவடிக்கையும் தேவை" என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள எவர்கிவன் கப்பல் விடுவிப்பில் முன்னேற்றம் : அதிகாரிகள் தெரிவிப்பு!

"எங்களுக்கு ஒரு தேசிய சட்டம் தேவை என்பது தெளிவாகிறது. ஏனென்றால் சில வாரங்களில் எங்கள் மருத்துவமனைகளில் குழப்பங்கள் ஏற்படலாம். இத்தாலி ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க தடுப்பூசி எதிர்ப்பு இயக்கத்தைக் கொண்டுள்ளது." எனக் குறிப்பிட்டார் டிராகி.

அதேபோல் சில வல்லுநர்கள் அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி மீது பாதுகாப்பு அச்சத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, தடுப்பூசிக்கு எதிரான கொள்கையாளார்களின் எண்ணிக்கை பெருகக்கூடும் என்று அரசாங்க தரிப்பினர் அஞ்சுகின்றனர். இவற்றைக் கருத்திற் கொண்டு, நீதித்துறை மந்திரி மார்டா கார்டபியா புதிய சட்ட ஒழுங்குமுறையைத் தயாரிக்கிறார். ஆனால் இதன் விவரங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடந்த வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆயினும் இப்போது அது மீளவும் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தாலியின் பிரதமர், 73 வயதான டிராகி, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு வரிசையில் காத்திருப்பதாகவும், இந்த வாரத்தில் அவர் போடமுடியும் என நம்புவதாகவும் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.