உலகம்

கோவிட்-19 பெரும் தொற்றை ஏற்படுத்தும் வைரஸானது விலங்குகளில் இருந்தே மனிதர்களுக்கு பரவியிருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என உலக சுகாதார மையமும், சீனாவும் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், மீண்டும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த பல தடவைகள் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில், இந்த கோவிட்-19 வைரஸ் சீனாவின் வுஹான் நகரிலுள்ள வைராலஜி ஆய்வு மையத்தில் இருந்து கசிந்தோ அல்லது அங்கிருக்கும் மிகப் பெரும் விலங்குகள் உணவு சந்தையில் இருந்தோ பரவியிருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றே WHO நிபுணர் குழு தெரிவித்து வந்தது.

வௌவால் அல்லது எறும்பு திண்ணி போன்ற விலங்குகளில் இருந்து பரவியிருக்கலாம் என்றும் பலர் கருதியிருந்த போதும் இதற்கும் உறுதியான ஆதாரம் இல்லை என்றே கூறப்பட்டது. சமீபத்தில் அசோசியேட் பிரஸ் என்ற பத்திரிகையில் WHO நிபுணர் குழு தமது ஆய்வு முடிவை மட்டும் வெளியிட்டிருந்தது. இந்த ஆய்வின் முழு அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. குறித்த பத்திரிகையில் வெளியான முடிவிலேயே விலங்குகளில் இருந்தே கொரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் ஒரு ஆய்வகக் கசிவு என்ற கோணத்தில் இருந்து விலகி, விலங்கிடம் இருந்து எப்படி மனிதர்களுக்குப் பரவியிருக்கும் என்ற கோணத்தில் மாத்திரமே இனி விசாரிப்பது பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வளவு தாமதமாக இந்த முடிவு அறிவிக்கப் பட்டிருப்பதால், சீன அதிகாரிகளது அழுத்தம் காரணமாக ஆய்வு முடிவு மாற்றப் பட்டிருக்கலாம் எனப் பரவலாக சந்தேகமும் எழும்பியுள்ளது.

உலகளவில், ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து செயற்படும் Covax திட்டத்தின் மூலம் வறிய ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை பாரபட்சமின்றி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. ஆனால் பல ஆப்பிரிக்க நாடுகளில் மதச் சார்பான தவறான நம்பிக்கைகள் மற்றும் வதந்திகள் காரணமாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள பெரும்பாலான மக்களிடம் தயக்கம் உள்ளது.

இந்தத் தயக்கத்தை நீக்கி, பொது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை உகண்டாவின் அதிபர் யோவரி முசவேனி ஊடகங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். உலகளவில் பல நாடுகளின் தலைவர்கள் இவ்வாறு தமது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் ஊடகங்கள் முன்பாக கொரோனா தடுப்பூசியை போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உகண்டாவில் முதற்கட்டமாக நாடு முழுதும் 2 கோடியே 19 இலட்சம் பேருக்கு படிப்படியாக தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 127 841 932
மொத்த உயிரிழப்புக்கள் : 2 797 390
குணமடைந்தவர்கள் : 103 046 486
ஆக்டிவ் தொற்றுக்கள் : 21 998 056
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 93 659

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 30 962 803 : மொத்த உயிரிழப்புக்கள் : 562 526
பிரேசில் : 12 534 688 : 312 299
இந்தியா : 12 039 644 : 161 881
பிரான்ஸ் : 4 545 589 : 94 596
ரஷ்யா : 4 528 543 : 98 033
பிரிட்டன் : 4 333 042 : 126 592
இத்தாலி : 3 532 057 : 107 933
ஸ்பெயின் : 3 255 324 : 75 010
துருக்கி : 3 208 173 : 31 076
ஜேர்மனி : 2 786 345 : 76 468
கொலம்பியா : 2 382 730 : 62 955
ஆர்ஜெண்டினா : 2 308 597 : 55 449
மெக்ஸிக்கோ : 2 226 550 : 201 623
ஈரான் : 1 855 674 : 62 397
தென்னாப்பிரிக்கா : 1 545 431 : 52 663
கனடா : 965 404 : 22 880
பாகிஸ்தான் : 659 116 : 14 256
பங்களாதேஷ் : 595 714 : 8904
சுவிட்சர்லாந்து : 592 217 : 10 300
இலங்கை : 92 088 : 561
சீனா : 90 182 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.