உலகம்

சுவிற்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்றும் வைரஸ் தொற்று பரிசோதிக்கப்பட்ட மக்களை ஏப்ரல் மாதத்தில் பெரிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுதிக்க வேண்டும் என சுவிஸ் சுகாதாரத் தலைவர் சுகாதார இயக்குநர்களின் தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு அட்டை வழங்குவதற்கான முன்னோடித் திட்டங்களும், ஏப்ரல் இறுதிக்குள் துவங்கப்பட வேண்டும். அதேபோல் ஏப்ரல் இறுதிக்குள், வைரஸ் ஆபத்து இருப்பதாக கருதப்படும் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு வரும் கோடைகாலத்தில் கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு அட்டையை அறிமுகப்படுத்துவதாக சுவிற்சர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தின் சரியான விவரங்கள் மற்றும் அது அறிமுகப்படுத்தப்படும் திகதி என்பன இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஏங்கல்பெர்கரின் இந்த நடைமுறை ஒப்புதல் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதுவரை சுவிற்சர்லாந்தில் தொற்றுநோயின் போக்கை பட்டியலிட உதவுவதில் மிகவும் முக்கியமான கணிப்புக்களை வழங்கிய மருத்துவ நிபுணராக, சுகாதார இயக்குநர்களின் தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.