உலகம்

சூயஸ் கால்வாயின் குறுக்காகத் தரை தட்டியிருந்த எவர் கிவன் கப்பல், மிதக்கத் தொடங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை, சூயஸ் கால்வாயுடாகப் பயணித்த 200,000 டன் எடையுடைய இக் கப்பல் அதிக காற்று மற்றும் மணல் புயல் வீசியதைத் தொடர்ந்து, தனது பயணப்பாதையில் விலகி, கால்வாயின் இரு கரைகளிலும் சிக்கிக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து கால்வாயின் இரு புறத்திலும் சுமார் 400 சரக்குக் கப்பல்கள் தங்கள் பயணத்தைத் தொடர முடியாமல் தவித்தன. கப்பலை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்ற போதும் அவை சிக்கலாகவே இருந்தன. கடுமையாகக் கழிந்த இந்த நாட்களில் உலக வர்த்தகத்துறையில் பெரும் அச்சம் ஏற்பட்டிருந்தது. சந்தைநிலவரங்கள் பெரும் சரிவினைக் காணத் தொடங்கின.

இந்த வார இறுதியில், கப்பலை மீட்பதற்காக, சுமைகளை குறைக்க கப்பலிலுள்ள 18,000 கொள்கலன்களில் , சுமார் 600 கொள்கலன்களை அகற்ற வேண்டியிருக்கும் என்று அஞ்சப்பட்டது. இந் நிலையில், ஒரு டச்சு நிபுணர் குழு, எஸ்.எம்.ஐ.டி, 13 இழுவைக் கப்பல்களைக் கொண்டு அகற்ற முயற்சித்தது. அதேவேளை கப்பலின் முன்புறம் சிக்குண்டிருந்த தரைப்பகுதி ஆழப்படுத்தப்பட்டது.

தொடர்ச்சியான பணிகளால், திங்கள்கிழமை அதிகாலை, கப்பலின் பின்புறம் விடுவிக்கப்பட்டது. சில மணிநேரங்களுக்குப் பின் கொண்டாட்டமான கூச்சல்களுக்கு மத்தியில் , எவர் கிவன் கப்பலின் முன்புறமும் மண்புதையலில் இருந்து விடுவிக்கப்பட, வெளியே வந்து, மீளவும் பயணம் தொடங்கியது.

விடுவிக்கப்பட்ட இந்தக் கப்பல் கிரேட் பிட்டர் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது கால்வாயின் இரண்டு பிரிவுகளுக்கு இடையில் காப்பு இடத்தின் வடக்கே அமர்ந்திருக்கிறது. அங்கு அது பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபின் மீண்டும் பயணத்தைத் தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கப்பல் விடுவிக்கப்பட்டதனால் சூயஸின் தடை நீங்கிட , தரித்து நின்ற மற்றைய கப்பல்கள் பயணங்களைத் தொடங்கின.

சூயஸ் கால்வாய் பயணம் தொடர்பிலான ஒரு சுவாரசியமான தகவல் கீழேயுள்ள இணைப்பிலுள்ளது. வாசித்துப்பாருங்கள்.

சூயஸ் கால்வாயின் பட்டப்பெயர் மார்ல்பரோ கால்வாய் (Marlboro Canal)

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.