உலகம்

மியான்மார் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்தும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும், தமது தலைவர்களை விடுவிக்கக் கோரியும் அந்நாட்டு மக்களால் முன்னெடுக்கப் பட்டு வரும் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு மியான்மார் இராணுவம் ஒடுக்கி வருகின்றது.

போராட்டத்தைக் கலைக்க பொது மக்கள் மீது ஈவிரக்கமின்றி இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி இதுவரை 500 இற்கும் அதிகமானவர்களைப் படுகொலை செய்துள்ளது.

இந்த நூற்றாண்டின் மிகத் தீவிரமான இந்த மனிதாபிமானத்துக்கு எதிரான கொடும் செயலுக்காக, பல சர்வதேச நாடுகளும், ஐ.நாவும் தமது எதிர்ப்பை மியான்மார் மீது பல வழிகளில் காட்டி வருகின்றன. இந்நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிராக கரேன் நேஷனல் யூனியன் என்ற புரட்சி அமைப்பு ஒன்று தென் பகுதியின் பல கிராமங்களில் இருந்து மக்களைத் திரட்டி ஆயுதப் போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். இவர்கள் மீது சமீபத்தில் மியான்மார் இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிய வருகின்றது.

இந்த அமைப்பு இருப்பதாகக் கருதப் படும் பல கிராமங்களில் கடந்த 4 நாட்களாக இந்த ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் மாத்திரம் 480 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. இதனால் அங்கு மிகப் பெரும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயமும் தோன்றியிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஆனால் மியான்மாரில் இராணுவம் ஏப்பிரல் 1 முதல் 30 வரை தனது செயற்பாடுகளை நிறுத்தி அமைதிக்கு அழைப்பு விடுப்பதாக அந்நாட்டு இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இருந்த போதும் மக்களது போராட்டம் தீவிரமடைந்தால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மியான்மாரில் பணியாற்றும் தனது நாட்டு மக்கள் குடும்பத்தினருடன் உடனடியாகத் தாயகம் திரும்ப வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.