உலகம்

புதன்கிழமை தெற்கு கலிபோர்னியாவின் அலுவலகக் கட்டடம் ஒன்றில் மர்ம நபரால் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் கொல்லப் பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

போலிசார் திருப்பி நடத்திய பதில் தாக்குதலில் குறித்த மர்ம நபர் காயமடைந்ததாகவும், பின் வைத்திய சாலையில் அம்னுமதிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களில் இடம்பெறும் 3 ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும். துப்பாக்கிதாரி ஏன் தாக்குதல் நடத்தினார் என்ற பின்னணியும், அவரது நிலமை எவ்வாறு உள்ளது என்ற தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இதேவேளை தான்சானியால் அண்மையில் மறைந்த அதிபர் ஜான் மெகுபுலியின் உடலக்கு அஞ்சலி செலுத்த கூடிய இலட்சக் கணக்கான மக்களில் சிலர் மீது மைதான சுவர் திடீரென இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 45 பேர் பலியாகி உள்ளனர்.

2015 முதல் அதிபராகப் பதவி வகித்த ஜான் மெகுபுலி மக்கள் செல்வாக்கு மிகுந்த அதிபராவார். இவரது திடீர் மரணமும், இறுதிச் சடங்கில் கூடிய மக்களில் சிலரது மரணமும் அங்கு பொது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.