உலகம்

இத்தாலியின் பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள், ஈஸ்டர் வாரத்தின் பின்னதாக தளர்வுறும், உணவகங்கள், கடைகள் மற்றும் அருங்காட்சியகங்கள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய விதிகள் ஏப்ரல் முழுவதும் நீட்டிக்கப்படும் என்று அரசாங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

ஆயினும், ஏப்ரல் 30 ம் திகதிக்கு முன்னர் மீண்டும் விதிகளை மறுஆய்வு செய்வதற்கான உரிமையை அரசாங்கம் கொண்டுள்ளது பிரதம மந்திரி மரியோ டிராகி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது !

தற்போது நடைமுறையில் உள்ள விதிகள் ஏப்ரல் 6ந் திகதி காலவதியாகும் போது, ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 30 வரை இத்தாலியின் அனைத்து பகுதிகளும் சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலங்களாக கருதப்படும். எவ்வாறாயினும், ஈஸ்டர் விடுமுறையைத் தொடர்ந்து, மேல்நிலைப் பள்ளியின் முதல் ஆண்டு வரை (ப்ரிமா மீடியா) மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். சிவப்பு மண்டலங்களில் கூட, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ஆன்லைன் வகுப்புக்கள் நடைபெறும்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை சொல்லும் செய்தி!

இதற்கிடையில், ஆரஞ்சு மண்டலங்களில் உள்ளவர்கள், தங்கள் நகராட்சிகளில் மட்டுப்படுத்தப்பட்டவகையில், தங்கள் ஊருக்குள் தங்கியிருப்பவரை ஒரு நாளைக்கு ஒரு முறை நண்பர்களையோ அல்லது குடும்பத்தினரையோ சந்திக்கச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

புதிய ஆணையின் உரை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், புதன்கிழமை இரவு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு அறிக்கையில் முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது. அதில், சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை கட்டாயமாக்கப்படும். தடுப்பூசி போட மறுக்கும் எவரையும் பொதுமக்களிடமிருந்து விலகி இருக்கும் பணிகளில் நியமிக்க முடியும். இல்லையென்றால், அவர்களின் ஊதியம் நிறுத்தப்படும்.

சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா, வசந்தத்தின் இரண்டாம் பாதியில் நடவடிக்கைகளை தளர்த்தக் கூடிய சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.