உலகம்

உலகளவில் அதிகபட்சமாக வறிய நாடுகளில் கொரோனா தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகளின் தேவை மிக மிக அதிகரித்துள்ள நிலையில், அண்மையில் வெளியாகி உள்ள செய்தி ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது உற்பத்தியின் போது ஏற்பட்ட மனிதத் தவறால் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் 1 1/2 கோடி தடுப்பூசி டோஸ்கள் வீணாகியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் தான் அமெரிக்காவின் பிரபல ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் தடுப்பு மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியிருந்தது. சமீபத்தில் இதன் தடுப்பூசி உற்பத்தி நடக்கையில், 2 தடுப்பூசி பொருட்கள் திடீரென ஒன்றுடன் இன்னொன்று கலந்து கோடிக் கணக்கான டோஸ் தடுப்பூசிகள் வீணாகியுள்ளன. தற்போது இப்பிரச்சினை சரி செய்யப் பட்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்புக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அமைப்பின் அதிகாரிகளும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தில் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிய வருகின்றது. மேலும் இவர்களது அனுமதியின் பின்பு தான் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மீண்டும் மருந்து தயாரிக்க முடியும் என்பதால் அந்த நிறுவனத்தின் ஏற்றுமதி தாமதமாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 130 224 075
மொத்த உயிரிழப்புக்கள் : 2 841 209
குணமடைந்தவர்கள் : 104 929 976
ஆக்டிவ் தொற்றுக்கள் : 22 452 890
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 96 464

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 31 244 639 : மொத்த உயிரிழப்புக்கள் : 566 611
பிரேசில் : 12 842 717 : 325 559
இந்தியா : 12 303 131 : 163 428
பிரான்ஸ் : 4 695 082 : 95 976
ரஷ்யா : 4 554 264 : 99 233
பிரிட்டன் : 4 350 266 : 126 764
இத்தாலி : 3 607 083 : 109 847
துருக்கி : 3 357 988 : 31 713
ஸ்பெயின் : 3 291 394 : 75 541
ஜேர்மனி : 2 854 137 : 77 244
கொலம்பியா : 2 417 826 : 63 614
ஆர்ஜெண்டினா : 2 363 251 : 55 941
போலந்து : 2 356 970 : 53 665
மெக்ஸிக்கோ : 2 244 268 : 203 664
ஈரான் : 1 897 314 : 62 759
தென்னாப்பிரிக்கா : 1 549 451 : 52 897
கனடா : 987 918 : 23 002
பாகிஸ்தான் : 678 165 : 14 613
பங்களாதேஷ் : 617 764 : 9105
சுவிட்சர்லாந்து : 603 092 : 10 350
இலங்கை : 92 917 : 571
சீனா : 90 226 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.