உலகம்

மியான்மாரில் இணைய வழிப் பாவனைக்கு இராணுவத்தால் விதிக்கப் பட்ட தடை தொடர்ந்து நீடிக்கின்றது.

மேலும் அங்கு இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வரும் பொது மக்கள் சமீபத்தில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்திலும் ஈடுபட்டனர். ரேடியோ அலைகள், ஆப்லைன் இணைய வழிகள், குறும் செய்திகள் மற்றும் மட்டுப் படுத்தப் பட்ட இணையப் பாவனை வழியாக மியான்மார் மக்கள் தொடர்ந்து பிறருக்கு அழைப்பு விடுத்தும், போராட்டத்தை விரிவு படுத்தியும் வருகின்றனர்.

எனினும் மியான்மாரில் டெலிகாம் இணைய வசதிகள் மற்றும் மாபைல் டேட்டா சேவைகளை நிறுத்துமாறு தாம் ஏன் உத்தரவிட்டோம் என இராணுவம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. வியாழக்கிழமை பஸ் தரிப்பிடத்தில் ஆர்ப்பாட்டக் காரர்கள் சிலரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதை அடுத்து ''Flower Strike'' என்ற நடவடிக்கைக்கு ஏனைய போராட்டக் காரர்கள் அழைப்பு விடுத்தனர். அதாவது தமது நண்பர்கள் கொல்லப் பட்ட இடத்தில் பூக்களைத் தூவுவதே இந்த நடவடிக்கை ஆகும்.

இதற்கான அழைப்பை போராட்டக் காரர்களின் தலைவர் கின் சடார் இணையம் துண்டிக்கப் பட முன்பு பேஸ்புக்கில் விடுத்திருந்தார். இதில் இனி வரும் நாட்களில் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எந்தளவுக்குத் தம்மால் கொரில்லா பாணியிலான தாக்குதலை நடத்த முடியுமோ அந்தளவுக்கு நடத்த வேண்டும் என்றும், இதில் அனைவரும் இணைய வேண்டும் என்றும் கின் சடார் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய உலகில் மனிதாபிமானத்துக்கு எதிரான போராக உருவெடுத்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக மியான்மாரில் இராணுவத்தினரால் நிகழ்த்தி வரப்படும் படுகொலைகளில் இதுவரை 543 இற்கும் அதிகமான பொது மக்கள் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வரும் போதும் மியான்மார் பொது மக்கள் தமது ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை.

இன்னொருபுறம் ஹாங்கொங் வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரும் போராட்டங்களில் ஒன்றாக 2019 ஆண்டு போராட்டம் கருதப் பட்டது. இதனை ஒருங்கிணைத்ததாக குற்றம் சாட்டப் பட்டு ஜனநாயக ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப் பட்டனர். வியாழக்கிழமை இந்த 9 பேரும் குற்றவாளிகள் என ஹாங்கொங் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இந்தத் தீர்ப்புக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.