உலகம்

வெள்ளிக்கிழமை கிழக்கு தாய்வானின் ஹுவாலியென் மலைப் பகுதிக்கு கீழே செல்லும் சுரங்கத்தில் 500 பயணிகளுடன் சென்ற ரயில் தடம் புரண்டு மோசமான விபத்தில் சிக்கியது.

இதில் குறைந்தது 41 பேர் பலியானதாகவும், 60 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தாய்வானில் கடந்த 4 தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான ரயில் விபத்தான இதன் போது ரயிலின் ஓட்டுனரும் பலியானார். தாய்பேயில் இருந்து டைட்டுங்க் இற்குப் பயணித்த இந்த அதிவேக ரயிலில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற மிக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளும் பயணித்துள்ளனர்.

மீட்புப் பணிகளில் அரசுடன் இணைந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் செயற்பட்டு வருகின்றது. இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப் படுகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.