உலகம்

இந்தியாவில் கோவிட்-19 தினசரி தொற்றுக்களில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 81 441 பேருக்கு தொற்று உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

மேலும் இத்தொற்றுக்கு 468 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தினசரி தொற்றுக்களில் ஏற்பட்ட இந்தத் திடீர் அதிகரிப்பு கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட தொற்றுக்களை விட அதிகமாகும்.

ஆனால் உலகில் அதிகபட்சமாக கடந்த 24 மணித்தியாலத்தில் பிரேசிலில் 89 459 பேருக்கு கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதுடன் இதில் 3673 பேர் உயிரிழந்தும் உள்ளனர். உலகளவில் கோவிட்-19 பெரும் தொற்றின் 3 ஆவது அலைத் தாக்கம் உலக நாடுகள் இதுவரை சந்தித்திராத பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தப் பாதிப்பை ஓரளவுக்கேனும் வலுவாக எதிர்கொள்ள உலக நாடுகளிடையே தடுப்பூசிகள் சம அளவில் விரைவாக விநியோகிக்கப் படுவது அவசியமாகும்.

ஆனால் அண்மைக் காலமாக தடுப்பூசிகளின் கொள்வனவில் செல்வந்த நாடுகள், அதிகளவு ஈடுபட்டும், ஒரு தடுப்பூசி கூட இதுவரை பெறாத நிலையில் பல வறிய நாடுகள் இருப்பதையும் உலக சுகாதார அமைப்பான WHO சுட்டிக் காட்டி கவலை தெரிவித்திருந்தது. கோவிட்-19 தொற்றுக்களை முன்னிட்டு பாகிஸ்தான் உட்பட 4 முக்கிய நாடுகளை புதிதாக சிவப்புப் பட்டியலில் சேர்த்து பயணத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து.

எதிர்வரும் ஏப்பிரல் 9 ஆம் திகதி காலை 4 மணியில் இருந்து அமுலுக்கு வரும் விதத்தில் புதிய பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இத்தடையில் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்னமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த 30 நாடுகள் உள்ளடக்கப் படுள்ளன. புதிதாக சிவப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்ட நாடுகளாக பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகியவை விளங்குகின்றன.

இத்தடை விதிக்கப் பட்ட நாடுகளில் இருந்து தாயகம் வரக் கூடிய இங்கிலாந்து அல்லது அயர்லாந்து குடிமக்கள் கட்டாயம் ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப் படுத்துதலில் இருந்த பின்னரே தமது வீடுகளுக்கு செல்ல முடியும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 130 672 345
மொத்த உயிரிழப்புக்கள் : 2 846 221
குணமடைந்தவர்கள் : 105 208 756
ஆக்டிவ் தொற்றுக்கள் : 22 617 368
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 97 310

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 31 299 565 : மொத்த உயிரிழப்புக்கள் : 567 284
பிரேசில் : 12 842 717 : 325 559
இந்தியா : 12 391 129 : 164 141
பிரான்ஸ் : 4 741 759 : 96 280
ரஷ்யா : 4 563 056 : 99 633
பிரிட்டன் : 4 353 668 : 126 816
இத்தாலி : 3 629 000 : 110 328
துருக்கி : 3 400 296 : 31 892
ஸ்பெயின் : 3 291 394 : 75 541
ஜேர்மனி : 2 872 379 : 77 421
கொலம்பியா : 2 417 826 : 63 614
போலந்து : 2 387 511 : 54 165
ஆர்ஜெண்டினா : 2 363 251 : 55 941
மெக்ஸிக்கோ : 2 244 268 : 203 664
ஈரான் : 1 908 974 : 62 876
தென்னாப்பிரிக்கா : 1 549 451 : 52 897
கனடா : 989 232 : 23 007
பாகிஸ்தான் : 678 165 : 14 613
பங்களாதேஷ் : 624 594 : 9155
சுவிட்சர்லாந்து : 605 342 : 10 350
இலங்கை : 93 128 : 571
சீனா : 90 226 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.