உலகம்

இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவுடனான பாகிஸ்தானின் நல்லுறவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது தொடர்பில் ஒரு உயர்மட்ட சந்திப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடத்தியுள்ளார்.

இந்த உயர்மட்ட சந்திப்பானது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மெஹ்மூட் குரேஷி மற்றும் வெளியுறவு அமைச்சை சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் நடத்தப் பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜியோ செய்திகள் ஊடகம் வெளியிட்ட தகவலில், சமீப காலமாக வலுப்பட்டு வந்த இந்திய பாகிஸ்தான் உறவு குறித்த முழுமையான ஆய்வை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து தரை வழியாகவும், கடல் வழியாகவும் சீனி, பருத்தி மற்றும் பருத்தி நூல் ஆகியவற்றை இறக்குமதி செய்ய பாகிஸ்தானின் ECC என்ற பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு அனுமதியளித்த சில தினங்களில் இந்த உயர் மட்ட சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இரு வருடங்களுக்குப் பின்பு ECC எடுத்திருந்த இந்த முடிவின் மூலம் இரு நாட்டு வர்த்தக உறவில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முறுகல் நிலை காரணமாக 2019 ஆகஸ்ட்டில் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவை பாகிஸ்தான் ஒருதலைப் பட்சமாகத் துண்டித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.