உலகம்

ஜப்பானில் கடந்த வருடம் இடம்பெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கோவிட்-19 பெரும் தொற்று காரணமாக இந்த வருடம் ஜூலையில் நடாத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.

ஆனாலும் கோவிட்-19 பெரும் தொற்றின் தாக்கம் எதிர்பார்த்தளவு குறையவில்லை. இந்நிலையில் பல குழப்பங்களுக்கு மத்தியில் ஜப்பானின் நாகனோ நகரில் ஒலிம்பிக் தீப ஓட்டம் ஆரம்பமானது.

ஜப்பானில் ஒலிம்பிக் தீபத்தை நாடு முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு செல்லும் சம்பிரதாய நிகழ்வு திட்டமிடப் பட்டும் உள்ளது. ஆயினும் நாகனோ மற்றும் ஒசாகா ஆகிய நகரங்களில் கோவிட்-19 அதிகரித்து வருவதால் தீப ஓட்டம் ரத்து செய்யப் படும் என செய்திகள் வெளியாகிய நிலையில் இதற்கு டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டியினர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இதன்பின்பு நாகனோ நகரில் ஒலிம்பிக் தீப ஓட்டம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.