உலகம்

சனிக்கிழமை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் மீது வேகமான வந்த கார் ஒன்று உள்ளே செல்ல முயன்ற போது தடுப்பு சுவரில் மோதி நின்றது. பின் அதில் இருந்து வெளியே வந்த மர்ம நபர் கத்தியுடன் போலீசாரை மிரட்டினார்.

தற்காப்புக்காக போலிசார் அந்நபரை சுட்டுக் கொன்றனர்.

இந்த மர்ம நபர் 25 வயதே நிரம்பிய நோவா கிரீன் என அடையாளம் காணப் பட்டுள்ளார். மேலும் இந்த கருப்பின தேசியவாத அமைப்பைச் சேர்ந்த நபர் என்று கூறப்படும் இவர் காரை வேகமாக ஓட்டி வந்து மோதியதில் போலிசார் ஒருவர் பலியானதாகவும் இன்னொரு காவலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடென் ஈஸ்டர் விடுமுறைக்காக தனது மனைவியுடன் கேம் டேவிட் என்ற இடத்தில் இருந்துள்ளார். தகவலை அறிந்த அவர் உயிரிழந்த போலிஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை விடுத்துள்ளார்.

தாக்குதல் தாரி நோவா கிரீனுக்கும் தீவிரவாத அமைப்புக்கும் இதுவரை தொடர்பிருப்பதாகக் கண்டறியப் படவில்லை. ஆனால் FBI விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றியுள்ள இடங்களில் மீண்டும் லாக்டவுன் அமுல் படுத்தப் பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.