உலகம்

சமீபத்தில் உற்பத்திக் கோளாறு காரணமாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் 15 மில்லியன் டோசேஜ் அளவு தடுப்பு மருந்து விரயமானது.

இதனால் இதே பால்ட்டிமோர் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப் படும் ஆஸ்ட்ரே செனெகா நிறுவனத்தின் தடுப்பு மருந்து உற்பத்தியை அமெரிக்க அரசு நிறுத்தியுள்ளது.

மறுபுறம் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனமோ மிகப் பெரும் அளவில் தடுப்பு மருந்துகள் விரயமானதற்கு நாம் முழுப் பொறுப்பையும் ஏற்கின்றோம் என்றும், வருங்காலத்தில் இத்தவறு நிகழாது எம் தடுப்பு மருந்துகளது தரத்தை நிர்ணயிப்பது எமது கடமை என்றும் அறிவித்துள்ளது. இந்த வருங்கால உற்பத்திக்காக குறித்த பால்ட்டிமோர் உற்பத்தி நிலையத்தை முழுமையாகப் பயன்படுத்த ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் முயலுமா என்பது தொடர்பில் அந்த நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.

ஆஸ்ட்ரா செனெகா நிறுவனமோ தாம் அமெரிக்க அதிபர் ஜோ பைடெனின் நிர்வாகத்தினருடன் இணைந்து புதிய உற்பத்தி நிலையத்தைப் பயன்படுத்துவோம் என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கோவிட்-19 பெரும் தொற்றின் 2 ஆவது அலைத் தாக்கம் ஏற்படுத்திய பாதிப்பை விட 3 ஆவது அலைத் தாக்கம் மோசமாக உள்ளது. அங்கு கடந்த 24 மணித்தியாலத்தில் 5000 புதிய கோவிட்-19 பெரும் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

அண்மையில் தான் பிரிட்டன் அரசு பாகிஸ்தானை சிவப்புப் பட்டியலில் சேர்த்ததன் மூலம் அங்கிருந்து வரும் பிரிட்டன் குடிமக்களுக்கு கட்டாய தனிமைப் படுத்துதலை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 131 459 390
மொத்த உயிரிழப்புக்கள் : 2 860 842
குணமடைந்தவர்கள் : 105 869 421
ஆக்டிவ் தொற்றுக்கள் : 22 729 127
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 98 589

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 31 383 126 : மொத்த உயிரிழப்புக்கள் : 568 513
பிரேசில் : 12 953 597 : 330 297
இந்தியா : 12 485 509 : 164 655
பிரான்ஸ் : 4 741 759 : 96 493
ரஷ்யா : 4 580 894 : 100 374
பிரிட்டன் : 4 357 091 : 126 826
இத்தாலி : 3 650 247 : 110 704
துருக்கி : 3 455 052 : 32 078
ஸ்பெயின் : 3 300 965 : 75 698
ஜேர்மனி : 2 886 020 : 77 502
போலந்து : 2 438 542 : 54 941
கொலம்பியா : 2 437 197 : 63 932
ஆர்ஜெண்டினா : 2 383 537 : 56 106
மெக்ஸிக்கோ : 2 249 195 : 204 011
ஈரான் : 1 932 074 : 63 160
தென்னாப்பிரிக்கா : 1 551 501 : 52 954
கனடா : 1 001 645 : 23 050
பாகிஸ்தான் : 687 908 : 14 778
பங்களாதேஷ் : 630 277 : 9213
சுவிட்சர்லாந்து 605 342 : 10 351
இலங்கை : 93 295 : 575
சீனா: 90 273 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.