உலகம்

அதிகளவு தொற்றக் கூடியதும், புதிய இரட்டை கோவிட்-19 திரிபு வைரஸுமான B1617 என்ற கோவிட்-19 மாறுபாடானது முதலில் இந்தியாவில் இனம் காணப் பட்டிருந்தது.

தற்போது இந்த ஆபத்தான திரிபு பிரிட்டனிலும் அடையாளம் காணப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வரவிருக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது பயணத்தை ரத்து செய்வது தொடர்பில் ஆலோசிக்கப் படுகின்றது.

குறித்த மாறுபாடு தொடர்பாக, தொற்றும் தன்மை, இதற்கான நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் பரவும் வகைகள் குறித்து பரிசோதனை ஆரம்பிக்கப் பட்டிருப்பதாக இங்கிலாந்தின் பொது மக்கள் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இந்த B1617 திரிபினால் பாதிக்கப் பட்ட 73 தொற்றாளர்கள் இங்கிலாந்திலும், 4 பேர் ஸ்காட்லாந்திலும் அடையாளம் காணப் பட்டுள்ளனர். அண்மைக் காலமாக கோவிட்-19 பெரும் தொற்று வைரஸின் தீவிர குணாதிசயங்கள் கொண்ட பல்வேறு வைரஸ் மாறுபாடுகள் இனம் காணப் பட்டு வருகின்றன.

இதில் பிரிட்டனில் அதிகபட்சமாக B117 என்ற மாறுபாடு மிக அதிகளவு மக்களிடம் இனம் காணப் பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் முதலில் அடையாளம் காணப் பட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் B1617 என்ற மாறுபாடானது, இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் அடையாளம் காணப் பட்ட வைரஸ் திரிபுகளை விட ஆபத்தானது என அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது இந்த B1617 மாறுபாடு T-cell மற்றும் antibody செயற்பாடு ஆகிய இரண்டு முக்கிய எதிர்ப்புகளில் இருந்தும் தப்பித்து விடுவதாகக் கூறப்படுகின்றது.

இதனால் இந்திய மக்கள் கோவிட்-19 தொற்றின் மிக வலிமையான ஒரு அலையை எதிர்கொள்ளத் தம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. இதேவேளை பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிரிட்டனின் போக்குவரத்துக்கான சிவப்புப் பட்டியல் நாடுகளில் இருக்கும் போதும், இந்தியா இன்னமும் இந்த சிவப்புப் பட்டியலில் சேர்க்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 139 768 352
மொத்த உயிரிழப்புக்கள் : 3 001 658
குணமடைந்தவர்கள் : 118 843 369
ஆக்டிவ் தொற்றுக்கள் : 17 923 325
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 106 797

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 32 224 139 : மொத்த உயிரிழப்புக்கள் : 578 993
இந்தியா : 14 291 917 : 174 335
பிரேசில் : 13 758 093 : 365 954
பிரான்ஸ் : 5 187 879 : 100 073
ரஷ்யா : 4 684 148 : 104 795
பிரிட்டன் : 4 380 976 : 127 191
துருக்கி : 4 086 957 : 35 031
இத்தாலி : 3 826 156 : 115 937
ஸ்பெயின் : 3 396 685 : 76 882
ஜேர்மனி : 3 095 016 : 80 141
போலந்து : 2 660 088 : 61 208
ஆர்ஜெண்டினா : 2 629 156 : 58 925
கொலம்பியா : 2 602 719 : 67 199
மெக்ஸிக்கோ : 2 295 435 : 211 213
ஈரான் : 2 168 872 : 65 680
தென்னாப்பிரிக்கா : 1 562 931 : 53 571
கனடா : 1 096 716 : 23 500
பாகிஸ்தான் : 745 182 : 15 982
பங்களாதேஷ் : 707 362 : 10 081
சுவிட்சர்லாந்து : 630 194 : 10 498
இலங்கை : 95 949 : 608
சீனா : 90 468 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.