உலகம்

இத்தாலியில் இந்த மாத இறுதியில் கடுமையான கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் சிலவற்றைத் தளர்த்தத் தொடங்கும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.

தற்போதைய பல கட்டுப்பாடுகள் ஏப்ரல் 26 முதல் படிப்படியாக தளர்த்தப்படும் என்று நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி உறுதிப்படுத்தினார்.

குறிப்பிட்ட திகதியிலிருந்து, தற்போதுள்ள சிகப்பு மண்டலங்கள் விலக்கப்பட்டு, முழு நாட்டையும் குறைந்த ஆபத்துள்ள 'ஆரஞ்சு' 'மஞ்சள்' மண்டல வகைப்பாட்டுக்கள் அறிவிக்கப்படும். இவற்றில், பள்ளிகள் மற்றும் திறந்தவெளி வணிக நடவடிக்கைகள் மீண்டும் திறக்க முன்னுரிமைகளாக இருக்கும், எனத் தெரிவித்தார்.

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில், அனைத்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் நேரில் கற்பித்தல் தொடங்கும். மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மஞ்சள் மண்டலங்களில் மீண்டும் உணவகங்களில் வெளிப்புற இருக்கை மட்டும் திறக்க அனுமதிக்கப்படும்.

கோட்டா எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்; ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச குற்றச்சாட்டு!

சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா கூறுகையில், " முதலில் ஏப்ரல் 26, நாட்டில் மஞ்சள் மண்டலத்தை மீட்டெடுப்பதன் மூலம் பள்ளிகளும், பின்னர் மே 15 முதல் வெளிப்புற குளங்கள் மீண்டும் திறக்கப்படலாம். ஜூன் 1 முதல் ஜிம்களையும், ஜூலை 1 முதல் வர்த்தக கண்காட்சிகளையும் திறப்பது குறித்து நாம் மறுதொடக்கம் செய்யலாம் என நம்பலாம்." என்றார்.

நடிகர் விவேக் மறைவு!

எவ்வாறாயினும், பொருளாதாரம் முழுமையாக மீண்டும் திறக்கப்படும் திகதியை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.

பிரதமர் டிராகி பேசுகையில், "அனைத்து பிராந்தியங்களுக்கும் இடையில் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பயணம், மஞ்சள் மண்டல பகுதிகளாக மாறுகையில், மீண்டும் அனுமதிக்கப்படும். ஆயினும் நாடு தழுவிய இரவு 10 மணி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்" என கூறினார்.

சுகாதார கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கும் மரியோ டிராகியின் அரசு, உயர் சுகாதார நிறுவனம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பக் குழு ஆகியவற்றுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின் பின்னர் இந்த அறிவிப்புக்கள் வந்துள்ள போதும், இந்தச் சந்திப்பில் சர்வதேச பயணத்திற்கான தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான எந்த திட்டத்தையும் பிரதமர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.