உலகம்

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.

இத்தாலி நாடளாவிய தனது கொரோனா வைரஸ் தொற்றுக் கட்டுபாடுகளைப் படிப்படியாக தளர்த்தும் என பிரதமர் மரியோ டிராகி கடந்தவாரம் அறிவித்திருந்தார்.

இதன்படி, வரும் திங்கட் கிழமை முதல், (ஏப்ரல் 26) நாட்டின் சில கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட உள்ளன. இதில் குறைந்த ஆபத்துள்ள ‘மஞ்சள்’ மண்டலங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். இந்த பகுதிகளில், தற்போது நாடு முழுவதும் உள்ள பார்கள் மற்றும் உணவகங்களை மூடுவது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

கொரோனா அச்சுறுத்தல்; மே தினக் கூட்டங்களுக்கு தடை!

பிராந்தியங்களுக்கிடையேயான பயணத்திற்கான நாடு தழுவிய தடை இனி மஞ்சள் மண்டலங்களிலும் பொருந்தாது. அதேவேளை அதிக ஆபத்துள்ள சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் நுழையவும் வெளியேறவும் மக்களை அனுமதிக்க புதிய பயண “பாஸ்” ஐப் அறிமுகப்படுத்த டிராகி அரசு ஆலோசிக்கிறது. இருப்பினும், இந்த பாஸ் எந்த வடிவத்திலிருக்கும் அல்லது அதன் தேவைகள் என்ன என்பது குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

இத்தாலிய ஊடக அறிக்கையின்படி, இந்தப் பாஸை வைத்திருப்பவர் தடுப்பூசி போடப்பட்டிருக்கலாம், 48 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையை பரிசோதித்திருக்கலாம் அல்லது ஏற்கனவே கோவிட் -19 இலிருந்து மீண்டு வந்திருக்கலாம் என்று ஆவணச் சான்றளிக்கும் எனவும், முதலில் ஒரு காகித ஆவணத்தின் வடிவத்தில் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் ஒரு செயலிப் பயன்பாடு அல்லது QR குறியீட்டிற்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மத்திய அரசின் கொரோனா பாதுகாப்புத் திட்டங்கள் படு தோல்வி : பிரியங்கா காந்தி

இந்தப் பயனச் சான்றிதழ் (பாஸ்) விமான நிலையங்கள் அல்லது ரயில் நிலையங்களில் ஏறுவதற்கு முன்பு காட்டவும், காரில் பயணம் செய்தால் சோதனைச் சாவடியில் காவல்துறையினரால் நிறுத்தப்படும் போது காட்டவும் தேவைப்படும். மேலும் மஞ்சள் மண்டலங்களில் மீண்டும் ​​இசை நிகழ்ச்சிகள் மற்றும் கால்பந்து போட்டிகள் போன்ற சில கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் திறக்கப்படும்போது, அவற்றில் கலந்துகொள்ள இந்தப் பாஸை ஒரு தேவையாக மாற்றுவதையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் புதிய ஆவணம் தற்போது இஸ்ரேலில் நடைமுறையில் உள்ள 'தடுப்பூசி பாஸ்போர்ட்' திட்டங்களைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கில்லை. ஏனெனில் இது உள்நாட்டு பயணங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆயினும் இந்த புதிய பாஸ் திட்டம் எப்போது ஆரம்பமாகும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மோடிக்கு எதிரான டிரெண்டிங்கும் சித்தார்த்தின் துணிவும் !

ஆயினும் வரும் திங்கள்கிழமைக்குள் நடைமுறைக்கு வரவிருக்கும் நாட்டின் அடுத்த அவசர ஆணையை அமைச்சர்கள் தற்போது இறுதி செய்து வருவதால், இத்தாலியின் மீண்டும் திறக்கும் திட்டத்தின் பிற அம்சங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் வியாழக்கிழமைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.