உலகம்

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை முடிவதற்கு முன்னர் அனைத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளையும் படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மூலோபாயத்தை கடந்த வாரம் மத்திய கூட்டாட்சி அரசு அறிவித்தது.

ஆகஸ்ட் மாதத்திற்குள், தொற்றுநோய் மோசமடையவில்லை என்றால், தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் நீக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் , சுவிட்சர்லாந்து ஒரு ஆபத்தை எதிர்கொள்கிறது என மருத்துவப் பணிக்குழுவின் தலைவர் மார்ட்டின் அக்கர்மன் கூறினார்.

அவளும் அவளும் – பகுதி 10

இப்போது சுவிட்சர்லாந்தில் தினமும் 2,300 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன. இது அதிகம் எனக் கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில், 2020 வசந்த காலத்தில் தொற்றுநோயின் முதல் அலைக்கு மத்தியில் கூட, தினசரி பதிவு செய்யப்பட்ட எண்கள் 2,000 வழக்குகளைத் தாண்டவில்லை. இருப்பினும், ஆரம்ப நாட்களில் மிகக் குறைவான சோதனை செய்யப்பட்டது. எனவே எண்கள் அதிகமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, கிறபுண்டன் மாநிலத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல இன்று முதல் பதினாறு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிக்கு விண்ணப்பிக்முடியும் என அறிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தடுப்பூசிக்கான விருபத்தினைத் தெரிவித்தாலும், உடனடியாக அது கிடைக்காது குறைந்தது இரண்டரை மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

இந்தியாவில் ஒரே நாளில் 3 இலட்சத்திற்கும் அதிகமான வைரஸ் தொற்று - மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனங்கள் !

கடுமையான நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை தொடர்ந்து வழங்கப்படும். ஆயினும் மாநிலத்தின் வாசிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பதிவு செய்ய, www.gr.ch/impfen இணையத் தளத்தில் உள்நுழையுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.