உலகம்

உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 14 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

இதில் 9 1/2 கோடி பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள் ஆவர். இதன் பலனாக அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கோவிட்-19 பெரும் தொற்றும், உயிரிழப்பும் பெருமளவு குறைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள் இனி பொது வெளியில் முகக் கவசம் அணியத் தேவையில்லை என அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி அறிவித்துள்ளது. சிடிசியின் அறிவிப்பை வரவேற்ற அமெரிக்க அதிபர் பைடென் இந்த அறிவிப்பு கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒரு அசாதாரண முன்னேற்றம் என்றுள்ளார்.

மேலும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப அமெரிக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் இது ஒரு தேசபக்தி செயலாகும் என்றும் பைடென் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடென் பதவியேற்று 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் சமீபத்தில் பாராளுமன்றக் கூட்டத்தில் முதன் முறையாக ஆற்றிய உரையில், பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு அமெரிக்கா புதியதாக உதயமாகி வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

நூற்றாண்டில் இல்லாத மோசமான வைரஸ் தொற்று மற்றும் 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான பொருளாதார பின்னடைவு போன்ற பாரிய பிரச்சினைகளின் மத்தியில் ஜோ பைடென் அதிபராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள டிஸ்னிலேண்ட் 13 மாத கால மூடுகைக்குப் பின் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் வருகைக்காக மீளத் திறக்கப் பட்டுள்ளது. இது கலிபோர்னிய மாநிலமானது கோவிட்-19 இன் கோரப் பிடியில் இருந்து விடுபட்டுள்ளது என்பதற்கான முக்கிய அறிகுறி என்று கூறப்படுகின்றது.

ஆனால் தற்காலிகமாக உலகின் மிகப் பிரசித்தமான இந்த தீம் பார்க் உள்ளூர் வாசிகளுக்கு மாத்திரமே திறக்கப் பட்டுள்ளது என்பதுடன் மட்டுப் படுத்தப் பட்ட மக்களை மாத்திரமே ஒரே நேரத்தில் உள்ளே அனுமதிக்கும் விதத்திலும் தான் செயற்படவுள்ளது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 151 186 229
மொத்த உயிரிழப்புக்கள் : 3 181 059
குணமடைந்தவர்கள் : 129 145 496
ஆக்டிவ் தொற்றுக்கள் : 18 859 674
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 111 763

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 33 044 068 : மொத்த உயிரிழப்புக்கள் : 589 207
இந்தியா : 18 762 976 : 208 330
பிரேசில் : 14 592 886 : 401 417
பிரான்ஸ் : 5 592 390 : 104 224
ரஷ்யா : 4 805 288 : 110 128
துருக்கி : 4 788 700 : 39 737
பிரிட்டன் : 4 414 242 : 127 502
இத்தாலி : 4 009 208 : 120 544
ஸ்பெயின் : 3 514 942 : 78 080
ஜேர்மனி : 3 379 387 : 83 338
ஆர்ஜெண்டினா : 2 954 943 : 63 508
கொலம்பியா : 2 841 934 : 73 230
போலந்து : 2 792 142 : 67 502
ஈரான் : 2 479 805 : 71 351
மெக்ஸிக்கோ : 2 340 934 : 216 447
தென்னாப்பிரிக்கா : 1 579 536 : 54 331
கனடா : 1 211 083 : 24 169
பாகிஸ்தான் : 820 823 : 17 811
பங்களாதேஷ் : 756 955 : 11 393
சுவிட்சர்லாந்து : 658 143 : 10 625
இலங்கை : 106 484 : 661
சீனா : 90 655 : 4636

உலகளாவிய கொரோனா பெரும் தொற்றுக்கள் 15 கோடியைத் தாண்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.