உலகம்

ஐரோப்பியப் பெருங்கடலில் தத்தளித்த அகதிகளைக் காப்பாற்ற வேண்டும் என மத்தியதரைக்கடல் உதவி மையம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கடலில் தத்தளித்தோரைக் காப்பாற்றிய ஓஷன் வைக்கிங் கப்பல் இன்று சனிக்கிழமை இத்தாலியின் சிசிலித் தீவினை அடைந்தது.

இதிலிருந்து 236 அகதிகள் சிசலிக் கரையில் தரையிறக்கப்பட்டார்கள். இவர்களில் பாதிப்பேர் ஆதரவற்ற சிறுவர்கள் என, ஓஷன் வைக்கிங் மனிதாபிமானக் கப்பலை இயக்கும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 22 ம் திகதி லிபியாவிலிருந்து புறப்பட்ட இவர்களைக் காப்பாற்ற விடுக்கப்பட்ட அவசர அழைப்பினை ஏற்று, செவ்வாயன்று, கப்பல் 236 பேரை மீட்டது. சர்வதேச கடற்பரப்பில், இரண்டு சிறு படகுகளில் ளில் சிக்கித் தவித்த இவர்களில், 119 ஆதரவற்ற சிறார்களும் உள்ளடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் சிசிலியிலுள்ள அகஸ்டா துறைமுகத்தில் இறங்கிய 236 பேருக்கும், புலம்பெயர்ந்தோருக்கு அடையாள சோதனைகள் மற்றும் கோவிட் -19 சோதனைகள் வழங்கப்பட்டதாக, தெரியவருகிறது. சிறுவர்கள் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அறியவருகிறது.

SOSன் மத்திய தரைக்கடல் இயக்குநரான ஃபிரடெரிக் பெனார்ட், “ கடந்த சில மாதங்களில் முதல் முறையாக, சர்வதேசக் கடற்பரப்பில் நடந்த இந்த மீட்பு ஐரோப்பிய அரசாங்கங்களின் தரப்பில் விழிப்புணர்வை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கூறினார்.

இந்த ஆண்டு இதுவரை குறைந்தது 453 பேர், மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கையில் இறந்துவிட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.