உலகம்

ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத் தலைநகர் புல் இ ஆலமில் உள்ள மருத்துவ மனை அருகே இஸ்லாமியர்கள் நோன்பு துறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு சில நிமிடங்களுக்குள் மோசமான கார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

இதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 70 பேருக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இன்னொரு புறம் ஆப்கான் தலைநகர் காபூலில் எரிபொருள் தாங்கிய டேங்கிகளில் சனிக்கிழமை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 7 பேர் பலியானதாகவும், 14 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 வருட இராணுவ முற்றுகைக்குப் பின் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறும் பணியை நேற்று சனிக்கிழமை தொடங்கியிருந்த அதே சந்தர்ப்பத்தில் இந்த இரு நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் இடம்பெற்ற செப்டம்பர் 11 ஆம் திகதிக்கு முன்பு அதாவது இந்தத் தீவிரவாதத் தாக்குதலின் 20 ஆவது நிறைவு தினத்தை ஒட்டி தற்போது ஆப்கானில் நிலை கொண்டிருக்கும் அனைத்து அமெரிக்க நேட்டோ படைகளும் வாபஸ் பெறவுள்ளன. இதில் அனைத்து 2500 தொடக்கம் 3500 இற்கு இடைப்பட்ட அமெரிக்கத் துருப்புக்களும், 7000 நேட்டோ நட்பு படைகளும் அடங்குகின்றன.

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும், வெளிநாட்டுத் துருப்புக்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில், 2442 அமெரிக்க வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர். 20 666 பேர் காயமடைந்தனர். மேலும் 1144 நேட்டோ துருப்புக்களும் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.