உலகம்

சனிக்கிழமை ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஈரானுடன் 5 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும் சர்வதேச பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

2015 ஆமாண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீள வலியுறுத்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா, பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் பங்கேற்றன.

இப்பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் எவ்வாறு மீண்டும் அமெரிக்காவை இணைப்பது என்பது தொடர்பில் விவாதிக்கப் பட்டது. முன்னதாக அமெரிக்க முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் முறிந்திருந்த இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைவதற்கு, புதிய அதிபர் ஜோ பைடென் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சில நாட்களுக்கு முன்பு ஈரான் மற்றும் சவுதி அரேபியத் தலைவர்கள் பக்தாத்தில் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஈரானுடன் தாம் மேம்பட்ட உறவைக் கொண்டிருப்பதாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்தும் இருந்தார்.

இந்நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத், ஈரானுடனான உறவில் சவுதி அரசிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கத்தக்கது என்றும் இரு நாடுகளும் இணைந்து ஸ்திரத் தன்மையுடன் பிராந்திய வளர்ச்சிக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.