உலகம்

உலகளவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் வறிய நாடுகளுக்கு எதிர்பார்க்கப் பட்டதை விட அதிக பாரபட்சம் காண்பிக்கப் பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் ஏழை நாடுகளில் வெறும் 0.3% வீதமே கோவிட்-19 தடுப்பூசி கிடைத்திருப்பதாக WHO கணிப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் இதுவே 82% வீதத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப் பட்டுள்ளன. இதில் முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகள் அடங்குகின்றன. ஏழை நாடுகள் பெரும்பாலும் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய கண்டங்களைச் சேர்ந்தவையாக உள்ளன. இந்நிலையில் கோவிட்-19 தடுப்பூசி அதிகளவில் விநியோகிக்கப் பட்டு வரும் உலக நாடுகள் சில இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

உலகளவில் தற்போது இந்தியாவுக்கு அடுத்து தினசரி மோசமான கோவிட்-19 பாதிப்பினை சந்தித்து வரும் நாடாக பிரேசில் உள்ளது. ஆனால் உயிரிழப்பில் 4 இலட்சத்தைக் கடந்து அமெரிக்காவுக்கு அடுத்து 2 ஆவது இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3074 கோவிட்-19 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். மறுபுறம் கோவிட்-19 தொற்றுக்கள் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் போர்த்துக்கல் நாடானது ஸ்பெயினுடனான தனது எல்லையை மீளத் திறந்துள்ளது.

உலகில் வெற்றிகரமாக கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவின் 4 ஆவது மிகப் பெரும் நகரம் பேர்த் ஆகும். இந்த பேர்த் நகரில் உள்ள ஹோட்டல் பாதுகாவலர் ஒருவர் மற்றும் அவரது இரு குடும்ப உறுப்பினர்களுக்கு சமீபத்தில் கோவிட்-19 பாஸிட்டிவ் உறுதி செய்யப் பட்டதை அடுத்து இன்னும் இரு கிழமைகளுக்கு மினி லாக்டவுனை அமுல் படுத்த அவுஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளிவிபரம் :

மொத்த தொற்றுக்கள் : 152 869 817
மொத்த உயிரிழப்புக்கள் : 3 207 795
குணமடைந்தவர்கள் : 130 827 281
ஆக்டிவ் தொற்றுக்கள் : 18 834 741
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 111 949


நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 33 146 015 : மொத்த உயிரிழப்புக்கள் : 590 707
இந்தியா : 19 557 457 : 215 542
பிரேசில் : 14 725 975 : 406 565
பிரான்ஸ் : 5 642 359 : 104 706
துருக்கி : 4 849 408 : 40 504
ரஷ்யா : 4 823 255 : 110 862
பிரிட்டன் : 4 418 530 : 127 524
இத்தாலி 4 035 617 : 121 033
ஸ்பெயின் : 3 524 077 : 78 216
ஜேர்மனி : 3 412 373 : 83 702
ஆர்ஜெண்டினா : 2 993 865 : 64 096
கொலம்பியா : 2 877 746 : 74 215
போலந்து : 2 803 233 : 68 068
ஈரான் : 2 516 157 : 72 090
மெக்ஸிக்கோ : 2 347 780 : 217 168
தென்னாப்பிரிக்கா : 1 582 842 : 54 406
கனடா : 1 227 035 : 24 261
பாகிஸ்தான் : 829 933 : 18 070
பங்களாதேஷ் : 760 584 : 11 510
சுவிட்சர்லாந்து : 659 974 : 10 633
இலங்கை : 109 862 : 687
சீனா : 90 686 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.