உலகம்

உலகளவில் கோவிட்-19 பெரும் தொற்றினால் 4 ஆவது அதிக உயிரிழப்பு சந்தித்த நாடான மெக்ஸிக்கோவின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் மிக மோசமான மெட்ரோ ரயில் விபத்து ஏற்பட்டதில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட இந்த கோர விபத்தின் போது மெட்ரோ ஓடு தள பாலத்தில் இருந்து தடம் புரண்ட ரயில், ஒரு கார் மீது விழுந்து சேதமடைந்தது.

இதில் 70 பேர் படுகாயம் அடைந்ததுடன் உடனடியாக 34 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டனர். குறித்த மெட்ரோ பாலமானது நெடுஞ்சாலைக்கு மேலே 5 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்தது. நள்ளிரவு வேளை என்பதாலும், கவிழ்ந்து கிடந்த மெட்ரோ ரயினை மீட்க கிரேன்கள் தேவைப் பட்டதாலும் மீட்புப் பணிகள் தாமதமாகின. இறுதியாகக் கிடைத்த தகவல் படி தடம் புரண்டிருக்கும் மெட்ரோ ரயில் பெட்டிக்குள்ளே இன்னமும் பயணிகள் சிக்கியிருக்கலாம் என்றும் இவர்கள் உயிருடன் உள்ளனரா என்று தெரியவில்லை என்றும் கூறப் பட்டிருந்தது.

விபத்து ஏற்பட்ட 12 ஆவது மெட்ரோ லைன் பகுதியில் இடம்பெற்று வந்த கட்டுமானப் பணிகள் தொடர்பாக முன்பு சில முறைப்பாடுகளும், ஒழுங்கீனம் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப் பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றது. இரு தினங்களுக்கு முன்பு பங்களாதேஷின் பத்மா ஆற்றில் படகு மாவா என்ற இடத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் படகு ஒன்று சரக்குக் கப்பல் மீது விபத்தில் சிக்கியதில் 26 பேர் பலியானதாகவும், பலியானவர்களின் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.