உலகம்

2019 ஆமாண்டு இத்தாலியில் விடுமுறைக்கு வந்த இரு அமெரிக்க இளைஞர்கள் தாம் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே ஒரு போலிஸ் அதிகாரியை கொலை செய்ததாக வழக்கில் சிக்கியிருந்தனர்.

கோவிட்-19 பெரும் தொற்றால் தள்ளிப் போயிருந்த இவர்களது வழக்கின் முடிவு ரோமில் இருந்து விரைவில் வெளிவரும் என இப்போது எதிர் பார்க்கப் படுகின்றது.

சுமார் 14 மாதங்களுக்கும் அதிகமான காலத்துக்குப் பின் புதன்கிழமை இந்த இளைஞர்கள் சார்பான வழக்கறிஞர்கள் தமது விவாதங்களை கடுமையாக முன் வைக்கவுள்ளனர். ஆயினும் கலிபோர்னியாவில் முன்னால் பள்ளி மாணவர்களான இவ்விரு இளைஞர்களும் இவ்வாரம் தமது தண்டனையை பெறுவர் என்று நம்பப் படுகின்றது.

2019 ஆமாண்டு ஜூலை 26 ஆம் திகதி ரோமில் இந்தவிரு மாணவர்களும் தங்கியிருந்த ஹோட்டலில் இவர்கள் கொக்கைன் போதைப் பொருள் கொள்வனவு செய்ததாகக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைக்கு சாதாரண உடையில் இரு போலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு இளைஞர் கத்தியால் போலிஸ் அதிகாரியைத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவ மனையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த இளைஞர்கள் தற்பாதுகாப்புக்காகவே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக அவர்கள் சார்பான வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.

இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -

மே 1 ஆம் திகதி 2011 ஆமாண்டு பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் சூத்திரதாரியான அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன் அமெரிக்க அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டார். இது நிகழ்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடென் வெளியிட்ட செய்தியில் இவ்வாறு உறுதியளித்தார்.

'அமெரிக்கா மீது இன்னுமொரு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கவும், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டில் இருந்து நாடு ஒருபோதும் விலகாது!' என்றுள்ளார். பின்லேடன் கொல்லப் பட்ட நிகழ்வை அப்போது துணை அதிபராக இருந்த பைடென் முன்னால் அதிபர் ஒபாமாவுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் நேரடியாகக் காணொளி மூலம் பார்த்திருந்தார். இந்நிலையில் இது தனக்கு ஒரு போதும் மறக்க முடியாத நிகழ்வு என்றும், நம் தேசம் பாதுகாக்கப் பட்டு நீதி நிலை நிறுத்தப் பட்ட தினமென்றும் பைடென் மேலும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.