உலகம்

அமெரிக்காவின் FDA எனப்படும் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு, அடுத்த வாரம் அங்கு 12 இற்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட பருவ வயதினருக்கும் பைசரின் தடுப்பூசியை வழங்கப் பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இது தொடர்பான ஆய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த பள்ளி வருடம் ஆரம்பிப்பதற்குள் பல மாணவர்களுக்கு இத்தடுப்பூசியை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

பைசரின் தடுப்பூசி அமெரிக்காவில் ஏற்கனவே 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை அமெரிக்காவில் 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 2260 தன்னார்வலர்களுக்கு பைசரின் தடுப்பூசி செலுத்தப் பட்டு விளைவுகள் அவதானிக்கப் பட்டதில் முன்னேற்றம் இனம் காணப் பட்டுள்ளது. ஏற்கனவே 100 மில்லியனுக்கும் அதிகமான பைசர் தடுப்பூசி அமெரிக்காவில் பொது மக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள நிலையில், ஜூலை மாதத்துக்குள் இன்னும் 300 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது இன்னும் 150 மில்லியன் அமெரிக்க மக்களைப் பாதுகாக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் இந்தியாவில் கோவிட்-19 பெரும் தொற்றுக்களும், உயிரிழப்புக்களும் எதிர்பாராத விதத்தில் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் எல்லாவிதமான பயணிகளுக்கும் அவுஸ்திரேலியா தற்காலிகமாக மே 15 வரை பயணத் தடை விதித்துள்ளது.

மேலும் இதை மீறினால் சம்பந்தப் பட்ட நபருக்கு 5 வருட சிறைத் தண்டனையும் $51 0000 அமெரிக்க டாலர் தண்டப் பணமும் விதிக்கப் படம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் அவுஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை தார்மீக நெறிகளுக்கு முரணானது என்று விமரிசிக்கப் படுவதால், பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 13 ஆவது நாளாக தினசரி கோவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கை 3 இலட்சத்துக்கும் அதிகமாகவுள்ளது. மேலும் தினசரி உயிரிழப்புக்களும் கிட்டத்தட்ட 3000 ஆகவுள்ளது. ஆனால் அவுஸ்திரேலியாவில் கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக இதுவரை மொத்த கோவிட்-19 தொற்றுக்கள் 29 800 ஆகவும் உயிரிழப்புக்கள் 910 ஆகவுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 154 226 293
மொத்த உயிரிழப்புக்கள் : 3 228 00
குணமடைந்தவர்கள் : 132 386 857
ஆக்டிவ் தொற்றுக்கள் : 18 611 436
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 111 358

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 33 230 992 : மொத்த உயிரிழப்புக்கள் : 591 514
இந்தியா : 20 282 833 : 222 408
பிரேசில் : 14 791 434 : 408 829
பிரான்ஸ் : 5 656 007 : 105 130
துருக்கி : 4 900 121 : 41 191
ரஷ்யா : 4 839 514 : 111 535
பிரிட்டன் : 4 421 850 : 127 539
இத்தாலி : 4 050 708 : 121 433
ஸ்பெயின் : 3 540 430 : 78 293
ஜேர்மனி : 3 435 877 : 84 020
ஆர்ஜெண்டினா : 3 021 179 : 64 792
கொலம்பியா : 2 905 254 : 75 164
போலந்து : 2 808 052 : 68 133
ஈரான் : 2 555 587 : 72 875
மெக்ஸிக்கோ : 2 349 900 : 217 345
தென்னாப்பிரிக்கா : 1 584 961 : 54 452
கனடா : 1 243 257 : 24 342
பாகிஸ்தான் : 837 523 : 18 310
பங்களாதேஷ் : 763 682 : 11 644
சுவிட்சர்லாந்து : 663 952 : 10 655
இலங்கை : 113 676 : 709
சீனா : 90 714 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.