அண்மையில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவினர் நடத்திய ஆய்வொன்றில் பைசர் மற்றும் பயோண்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தானது நிஜவுலகில் 90% வீதத்துக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் அறிகுறிகளை மிகக் கூர்மையாக இல்லாது ஒழிப்பது அவதானிக்கப் பட்டிருப்பதாகக் கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: பைசர் தடுப்பூசி கோவிட்-19 அறிகுறிகளை மிகக் கூர்மையாக அழிக்கின்றது! : இஸ்ரேல் ஆய்வாளர்கள்

சுவிற்சர்லாந்தில் தொடரும் கொரோனா வைரஸ் முடக்கம் மற்றும் பணிநிறுத்தங்கள் மன ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவழக்கின்றது. ‘நச்சுத்தன்மை வாய்ந்தது’ என்று புதிய சுவிஸ் ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.

Read more: சுவிற்சர்லாந்தில் தற்போதைய நிலைகள் காரணமாக ஐந்து பேரில் ஒருவர் மன அழுத்தத்தில் பாதிக்கப்படுகிறார்கள் !

நவம்பரில் பிரிட்டனிலும், பின்பு தென்னாப்பிரிக்காவிலும் முதன் முறையாக இனம் காணப் பட்ட மிக வேகமாகப் பரவக் கூடியது எனக் கணிக்கப் பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் திரிபுகளுக்கு எதிராகவும் தமது தடுப்பு மருந்து சிறப்பாகச் செயற்படுவதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Read more: உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயற்படுவதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு

இன்று குய்ரினாலேஸ் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், இத்தாலிய குடியரசின் அறுபத்தேழாவது பிரதமராக பகல் 11.57 மணிக்கு, இத்தாலியின் குடியரசுத் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லா முன்னிலையில், மாரியோ ட்ராகி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அவருடன் 8 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் உள்ளடக்கிய 23பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது.

Read more: இத்தாலியின் புதிய பிரதமராக மாரியோ ட்ராகி பதவியேற்றார் !

இத்தாலியில் தொற்றுநோய்களின் தற்போதைய நிலைமையை விவரித்த சுகாதார அமைச்சரின் ஆலோசகர் வால்டர் ரிச்சியார்டி "இத்தாலி முழுவதும் உடனடியாக மொத்த பூட்டுதல் தேவைப்படுகிறது. இதில் குறைந்த காலத்திற்காகவுது பாரபட்சமின்றி பள்ளிகளும் மூடப்படும் நடவடிக்கைகள் அவசியம்" என வலியுறுத்தியுள்ளார்.

Read more: இத்தாலியில் நாடாளவிய பூட்டுதல் உடன் தேவை - தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உத்தி பலன்தராது : ஆலோசகர் வால்டர் ரிச்சியார்டி

சுவிற்சர்லாந்தின் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பிப்ரவரி 28 ந் திகதியின் பின்னரும் நீட்டிக்கப்படுமா? எனும் சுவிஸ் ஊடகங்களின் கேள்விக்கு, சுகாதார மந்திரி அலைன் பெர்செட் பூட்டுதல் நீட்டிக்கப்படுவது மட்டுமல்லாமல், பலவிதமான கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more: சுவிற்சர்லாந்தில் பூட்டுதல் நீட்டிப்பு தவிர்க்க முடியாதா ?

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.

சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.