சமீபத்தில் வெளியான ஒரு புள்ளி விபரத்தில் உலகளவில் கொரோனா பெரும் தொற்றுக்கு அதிகளவு தடுப்பு மருந்துகளை மக்களுக்கு வழங்குதலில் இந்தியா 3 ஆவது இடத்திலிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சுவிற்சர்லாந்தின் மலைகளில் படிந்த சஹாரா பாலைவன மணல் துகள்கள் !
சுவிற்சர்லாந்தில் நேற்று (06.02.21) சனிக்கிழமை பிற்பகலில் வீசிய காற்றின் போது, நாட்டின் சில பகுதிகளில் மென்மையான மங்கிய ஒளிர் நிலைகாணப்பட்டது.
சுவிற்சர்லாந்தில் இன்று #P2P ஆதரவாக கவனயீர்ப்பு வாகனப் பேரணிக்கு அழைப்பு !
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான (#P2P) தாயக மக்களின் தன்னெழுச்சியான உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக, சுவிசில் கவனயீர்ப்பு வாகனப் பேரணியொன்றுக்கு சமூக வலைத்தளங்களின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட சிறீலங்கா தேசியக் கொடிக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு !
சிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நியூகாம் நகரசபையினரால் பறக்கவிடப்படிருந்த ஶ்ரீலங்காவின் தேசியக் கொடியினைக் கண்ணுற்ற அப்பகுதி வாழ் தமிழர்கள், மின்னஞ்சல் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் விரைந்து இணைய அமெரிக்காவுக்கு ஈரான் வலியுறுத்து! : மியான்மாரில் வலுக்கும் ஆர்ப்பாட்டம்
2015 ஆமாண்டு முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமாவால் ஏற்படுத்தப் பட்டு பின்பு அடுத்த அதிபர் டிரம்பினால் ரத்து செய்யப் பட்ட ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் விரைந்து இணையுமாறு, புதிய அதிபர் ஜோ பைடென் நிர்வாகத்துக்கு ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.
தெற்கு பிலிப்பைன்ஸைத் தாக்கிய 6.3 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தெற்கு பிலிப்பைன்ஸின் டவாவோ டெல் சுர் என்ற பகுதியில், 6.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை தாக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் புதிய திரிபுகள் குறித்த ஒரு சுருக்கமான பார்வை!
இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 பெரும் தொற்றில் அதன் புதிய வகைத் திரிபுகள் (Mutations) மனித இனத்துக்குக் கடும் அதிர்ச்சியையும், சவாலையும் ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன.
More Articles ...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.
சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.