சுவிற்சர்லாந்தில் எதிர்வரும் மாதங்களில் வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தளர்த்தப்படலாம்.
ஒரு டோஸ் மாத்திரம் போதுமான ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அவசரகால அனுமதி!
உலகில் அதிகபட்சமாக 5 கோடி பேருக்கு அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ள நிலையில், தனி நபருக்கு ஒரேயொரு டோஸ் மாத்திரம் போதுமான புதிய வகை ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பு மருந்துக்கு அமெரிக்க அரசு அவசரகால அனுமதியளித்துள்ளது.
சிரியாவில் அமெரிக்கா விமானத் தாக்குதல்! : ஈரானுக்கு எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் ஜோ பைடெனின் உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை சிரியாவின் புகமல் நகரில் அமெரிக்க படையினர் மேற்கொண்ட வான் தாக்குதலில் 17 ஈரான் ஆதரவுப் படையினர் பலியானதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதராக கருப்பினப் பெண்மணி லிண்டா தோமஸ் நியமனம்!
ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.
இத்தாலியில் மேலும் சில பிராந்தியங்கள் அதிக ஆபத்துள்ள 'ஆரஞ்சு' மண்டலங்களாக அறிவிக்கப்படலாம் !
இத்தாலியின் உயர் சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மேலும் மூன்று இத்தாலிய பிராந்தியங்கள் அதிக ஆபத்துள்ள 'ஆரஞ்சு' மண்டலங்களாகவும், இரண்டு பிராந்தியங்கள் சிவப்பு மண்டலங்களாகவும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைட்டி சிறைத் தகர்ப்பில் 25 பேர் பலி! : 200 பேர் தப்பி ஓட்டம்
வியாழக்கிழமை ஹைட்டி நாட்டில் சிறையில் இருந்து 400 பேர் தப்பிச் சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 200 இற்கும் அதிகமான சிறைக் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
இஸ்ரேலில் ரகசிய அணுவாயுத ஆய்வு தொடர்பான பாரிய செயற்திட்டம் முன்னெடுப்பு!
கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
More Articles ...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.
சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.