எமதுபார்வை

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

இந்த ஆண்டு ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பனிப்பொழிவுடன் கூடிய வெள்ளை நத்தாராக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இம்முறை நத்தார் வெள்ளை நத்தாரக இல்லை. மாறாக இது கறுப்பு நத்தார் என்றே விசனம் கொள்கின்றார்கள் மக்கள்.

கோவிட் - 19 வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களும், நிகழ்வுகளும், களையிழந்து போயுள்ளன. பல இடங்களிலும், தேவாலயங்களில் கிறிஸ்மஸ் நள்ளிரவுப் பிரார்த்தனைகள் இல்லை. கத்தோலிக்கத்தின் தலைமைப்பீடமான வத்திகானில் போப்பாண்டவர் கலந்து கொள்ளும் நள்ளிரவுப் பிரார்த்தனையும், ஊரடங்கு உத்தரவு காரணமாக முன்னிரவில் நடைபெறும் என வத்திக்கான் அறிவித்துள்ளது.

நத்தார் கால விடுமுறையின் போது, ஐரோப்பியர்கள் பலரும் குதுகலித்து விளையாடும் பனிச் சறுக்கு மையங்கள், அனைத்து நாடுகளிலும் பூட்டப்பட்டுள்ளன. சுவிற்சர்லாந்தில் சில மாநிலங்களில் மட்டும் அனுமதி உண்டு.

இவையெல்லாவற்றையும் விட மக்களைப் பெரிதும் வருத்துவது விருந்துபசாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டமை. இது இரு வகையில் பாதிப்படைந்துள்ளது. பெரும்பாலான ஐரோப்பியக் குடும்பங்கள், உறவுகளாகக் கூடி மகிழ்வது நத்தார் பண்டிகை விடுமுறையின் போதே. நாடு கடந்த நிலையில் உள்ள உறவுகள் மட்டுமல்ல, நாட்டுக்குள்ளேயும் உறவுகள் சந்திக்க முடியாத சூழல் நிறைந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நத்தார் என்றாலே உறவுகள் நட்புகளின் சந்திப்பும் விருந்துபசாரங்களும், பரிசளிப்புக்களும், குதுகலமும் என நூற்றாண்டு காலம் பழக்கப்பட்ட மக்களுக்கு , இந்த ஆண்டு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் புதியவை. தினசரி வாழ்க்கையிலேயே குடும்பமாகவோ நன்பர்களாகவோ கோப்பி குடிப்பதையும், மது அருந்துவதையும், வெளியிடங்களில் பழக்கப்படுத்திக் கொண்ட பலருக்கும், வீட்டுக்குள் முடங்கிப் போவது என்பது முடியாது போகின்றது.
பார்களும், உணவகங்களும் இழுத்து மூடப்பட்டதில் இடிந்து போயுள்ளவர்கள் உரிமையாளர்களும் பணியாளர்களும் மட்டுமல்ல அதனை வாழ்க்கைப்பழக்கமா ஆக்கிக் கொண்ட மக்களும்தான்.

இது தவிர பல குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெரியவர்களை இழந்துள்ளார்கள். குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளார்கள். அந்த இழப்புக்களின் வலி இன்னமும் ஆறவில்லை. அதற்கான களங்களும் திறக்கவில்லை.

இவையெல்லாம் இனைந்து இம்முறை ஐரோப்பில் மட்டுமன்றி உலகெங்கிலம், நத்தார் மகிழ்ச்சியை இருளடையச் செய்துவிட்டது. எண்ணற்ற அலங்கார விள்க்குகளைப் பொருத்தி ஒளியூட்டினாலும் மக்கள் மனங்களில் படர்ந்திருக்கும் இருளை, காலம் கரைத்துவிட வேண்டும். இயல்பு வாழ்வினை இறையருள் கூட்டி வைக்க வேண்டும். இருள்மிகுந்த இரவின் பின்னதான ஒளிமிகு விடியல் விரைந்தே வருக !

இனிய நத்தார் வாழ்த்துக்கள் !

-4தமிழ்மீடியா குழுமம்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.