எமதுபார்வை

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

கொரோனா எனும் கோவிட் -19 வைரஸ் பெரும் தொற்றால், அதி கூடிய உயிழப்புக்களையும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியையும், அரசியற் குழப்பங்களையும், அடுத்தடுத்துச் சந்தித்திருக்கும் இத்தாலியின் புதிய பிரதமர் மரியோ ட்ராகி, 18.02.2021 வியாழக்கிழமை இரவு தனது அரசாங்கத்திற்கான நாடாளுமன்ற ஒப்புதலை, அங்கீகாரத்தை பெற்றார்.

இத்தாலியின் கீழ் சபை, பிரதிநிதிகள் சபை, இரண்டின் பிரதிநிதிகளும், முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரையும், அவரது தொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அமைச்சரவைக் குழுவையும் ஆதரித்துள்ளது. அவரது புதிய அரசுக்கு ஆதரவாக 535 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளையும் பெற்றார். ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் புதிய நிர்வாகியின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.

ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை செனட்டின், மேல் சபையில் நடந்த முதல் நம்பிக்கை வாக்கெடுப்பில் 262-40 என்ற வித்தியாசத்தில் எளிதாக வென்றார். இத்தாலியின் அன்மைக்கால அரசியற் குழப்பங்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருந்தாலும், கொரோனா வைரஸ் பெருந் தொற்றுநோயால் ஏறக்குறைய 100,000 மக்கள் இறந்ததும், அதனைத் தொடர்ந்த நாடாளவிய பூட்டுதலும்,  கடந்த ஆண்டு 8.9 சதவிகிதம் சரித்திருக்கிறது இத்தாலியின் பொருளாதாரத்தை. இத்தாலியின் வர்த்தகநகரும், ஐரோப்பிய நாகரீகத்தின் முக்கிய தளமுமாகிய மிலானோ நகரின் வர்தகக் காட்சி அரங்குகள் பல மூடப்பட்டு வருகின்ற ஒரு மோசமான நிலையில், இத்தாலியின் புதிய தலைவராக மரியோ ட்ராகி பொறுப்பேற்கின்றார்.

73 வயதுடைய மாரியோ ட்ராகி ஒரு பொருளாதார நிபுணர். ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவர். யூரோ எனும் நாணயப் புழக்கத்தினை பெருஞ் சவால்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தியதனால் " சூப்பர் மாரியோ " எனப் புகழப்பெற்றவர். அவரது " சூப்பர் மாரியோ" திறமையால் இத்தாலியை மீட்டெடுப்பாரா..?

விரிவான பார்வையினைக் கானொலியில் காணுங்கள்.....

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.