எமதுபார்வை

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.

2020 பிப்ரவரி 25, வடக்கு இத்தாலியில், சுவிஸ் டிசினோ மாநில குடியிருப்பாளர் ஒருவர் தொற்றுக்குள்ளானார். ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தொடக்க காலமாக அது இருந்தது. சீனாவில் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த போதும், அதன் கடுமை குறித்த செய்திகள் வெளிவந்திருந்த போதும் அது குறித்த அவதானங்கள் பரவலாக எழவில்லை.

அந்தக் காலப்பகுதியில் இத்தாலியில் தொற்று வேகமாகப் பரவத் தொடங்கியிருந்த போதும் கூட அங்குள்ள மக்களே அது குறித்துப் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை.

கொரோனா வைரஸ் ஒரு மிதமான ஆபத்தை மட்டுமே அளிக்கிறது. அது இன்னொருவகைக் காச்சல் என்பதே பலரது எண்ணமாக இருந்தது. சுவிஸ் அதிகாரிகள் கூட அந்த நேரத்தில் அவ்வாறே எண்ணியிருந்தனர். இது ஒரு தவறான மதிப்பீடு என்பது வெகு சீக்கிரமே நிரூபனமாயிற்று. சுவிற்சர்லாந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு விதிவிலக்கான நாடல்ல .பூட்டுதல் சாத்தியமே !  என அறிவித்தார் உள்துறை மற்றும் சுகாதார அமைச்ச அலைன் பெர்செட்.

மூன்று வாரங்களுக்குள், ஒரு மாநில அவசரநிலை அறிவிக்கப்பட்டது, மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது, பள்ளிகள் மூடப்பட்டன, எல்லைகள் மூடப்பட்டன. மளிகைக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் சுகாதார வசதிகள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது, ​​சுவிட்சர்லாந்தில் 2,200 வழக்குகளும் 14 இறப்புகளும் பதிவாகியிருந்தன. கடந்த ஒரு வருடத்தில் சுமார் 553,000 நோய்த் தொற்றுகள் மற்றும் அண்ணளவாக 9,250 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அண்டை நாடுகள் பொது இடங்களில் முகமூடிகளை கட்டாயமாக்கியிருந்த போதும், வைரஸ் பரவுவதிலிருந்து முகமூடிகள் பாதுகாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என சுவிற்சர்லாந்தில் பேசப்பட்டதும், தவிர்க்கப்பட்டதும் நடந்தது.

உண்மையில் சுவிற்சர்லாந்தில் அப்போது பெருமளவிலான முகமூடிகள் இருப்பில் இருக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாத இறுதியில், இராணுவத்தால் பெறப்பட்ட 90 மில்லியன் முகமூடிகள் சுவிட்சர்லாந்திற்கு வந்தபோது, ​​1.5 மீட்டர் தூரத்தை மதிக்க முடியாத இடங்களிலெல்லாம் முகமூடி அணியுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தினர்.

ஜூலை 6 ந் திகதி வரை, சுவிட்சர்லாந்தின் பொது போக்குவரத்திற்கு முகமூடி கட்டாயமாகும் வரை அரசாங்கம் அதனை பெரிதும் வலியுறுத்தவில்லை. இப்போது, ​​நிச்சயமாக, முகமூடிகள், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அது இல்லாத காலத்தை நினைவில் கொள்வது கடினமாகிவிட்டது.

அவசரகால நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களில், சுவிற்சர்லாந்து முழுவதும் கழிப்பறை காகிதத்திற்குப் பெருந் தட்டுப்பாடு ஏற்படலாயிற்று. மேலைத்தேசங்கள் அனைத்திலும் இந்த நிலை ஏற்பட்டிருந்தது. அரிசி, மாவு, சர்க்கரை, கை கிருமிநாசினி மற்றும் சோப்பு போன்றவைகளும் பெரிய அளவில் மக்களால் கொள்வனவு செய்யப்பட்டது.

சுவிற்சர்லாந்தில் மார்ச் 22 பின்னரே பார், உணவகங்கள், திறக்கப்படலாம் : மத்திய அரசு உறுதி !

சுவிற்சர்லாந்தின் வாழ்நிலை வசதி உடையவர்கள் இவ்வாறிருக்க, ஆயிரக்கணக்கான ஆவணமற்ற குடியேறியவர்கள் மற்றும் ஒற்றை பெற்றோர்கள், சமூக அமைப்புகளிடமிருந்து மளிகைப் பொருட்கள் மற்றும் பிற தேவைகளைப் பெறுவதற்குத் தயாராக இருந்தனர்.

இவ்வாறானவர்கள் தொற்றுக்குள்ளானால் என்னாகும் என்ற அச்சத்தை, பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் செய்தியாளர் ஒருவர் கேள்வியாக்கினார். அப்போது கூட்டாட்சித் தலைவராக இருந்த சோமரூக்கா அம்மையார், அவர்களுக்கான சிகிச்சைச் செலவை மனிதாபிமான அடிப்படையில் அரசு ஏற்கும் எனக்குறிப்பிட்டார்.

இவர்களுக்கு பல வாரங்களாக தொடர்ந்த உணவு விநியோகம், சுவிஸின் வறுமைப்பட்ட அல்லது ஏழ்மைப் மக்களை வெளிப்படுத்தியது. வீடுகளுக்குள் மக்கள் முடக்கப்பட்ட போது, பெரிதும் பாதிப்புக்குள்ளானவர்கள் தனித்து வாழும் முதியோர்கள். இவர்களுக்கான உதவிகளில் தன்னார்வ இளைஞர்கள் இணைந்து கொண்டனர். பல வெகுஜன அமைப்புக்கள் அரச நிறுவனங்களுடன் இணைந்து நெறிப்படுத்தின.

இத்தாலியில் மார்ச் மாதம் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாது : இத்தாலியின் சுகாதார அமைச்சர் !

கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் போது இது அதிகமாகவே இருந்தது. சுவிஸ் அதிகாரிகள் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு முடிந்தவரை அரிதாகவே வெளியேறுமாறு பரிந்துரைத்தனர். அவ்வாறான வேளையில், வீட்டிலிருந்து வேலை செய்வது பிரதானமானது. தொற்றுநோய்க்கு முன்பே சிலர் வீட்டிலிருந்து வேலை செய்த போதினும், இது அதிகமாகியது. மிக சமீபத்தில், இந்த ஆண்டு ஜனவரி 18 ம் திகதி, மத்திய அரசு முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கியது.

தொற்றுநோயின் முதல் மூன்று மாதங்களில், சுவிற்சர்லாந்தில் கோவிட் சோதனைகளின் வீதம் 100,000 மக்களுக்கு 54 என்றிருந்தது. 2020 டிசம்பரில், இந்த எண்ணிக்கை சுமார் பத்து மடங்கு 524 / 100,000 ஆக உயர்ந்தது. சோதனைகள் மிகவும் பரவலாக்கபட்ட போது, அதிகமான தொற்றுக்கள் கண்டறியப்பட்டு நேர்மறையான நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொற்றுநோய்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதைத் தடுத்தனர்.

வார இறுதிகளில் வெளியே சந்திக்க விரும்பும் இளைய தலைமுறையினரை, நாடளாவிய பெரும் பூட்டலின் போது, வீடுகளுக்குள் முடக்குவது பெருஞ்சவாலாகவே இருந்தது. இணையத்தில் கற்றல் என்பது மாணவர்களுக்கு படிப்படியாக இயல்பானது. இவை எல்லாவிடங்களுக்கும் பொருந்தக் கூடியதே.

தொற்றின் அதிகரிப்பாலும், மருத்துவமனைகள் நிரம்பிய நிலையிலும், வெளிநோயாளர் பிரிவுகள் மட்டுறுத்தபட்டன. தவிர்க்க முடிந்த சத்திரசிகிச்சைகள் பிற்போடப்பட்டன. அவசரசிகிச்சைப் பிரவுகள் அதிகமாக்கபட்டன. சில மாநிலங்களில் மருத்துவ சேவை உதவிக்கு இராணுவம் அழைக்கப்பட்டது.

மக்கள் செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். சமூக ஊடகங்கங்களில் தவறான தகவல்களும் பரிமாறப்பட்டன. இதனால் அச்சம் எழுந்தது. இது தவிர்க்கப்பட வேண்டுமென அரசு அறிவித்தது.

தடுப்பூசி ஆய்வுகள் குறித்த செய்திகள் தெரிவிக்கப்பட்டபோது, ​​ சுவிற்சர்லாந்தின் மக்களிடையே தடுப்பூசி குறித்த நம்பிக்கை அதிகளவில் இல்லை. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டபோது, அதன் ​​தேவை விநியோகத்தை விட அதிகமாக இருக்கும் என்பது தெளிவாகியது.

தடுப்பூசிகளின் செயல்திறனைப் பற்றிய அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அதிக எண்ணிக்கையிலான மக்களைப் பெற தூண்டியது எனலாம். கைகுலுங்கி வரவேற்றல், கட்டியணைத்து முத்தமிடல், இரவுப் பார்டிகள், வார இறுதி விளையாட்டுப் போட்டிகள், போன்ற மேலைத்தேய பண்பாட்டுக் கூறுகள் பல மறந்து போனவையாயின.

எல்லாவற்றிற்கும் மேலான மிகப்பெரிய பாடம், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட செயற்திறன் மிக்க நாடான சுவிற்சர்லாந்தில் கூட, இந்தத் தொற்றுநோயை மைக்ரோமேனேஜ் செய்ய முடியாது போனதாகும். ஆரம்பத்தில் அச்சமின்றியும், மத்தியில் அதிக பயத்தையும் அளித்த பெருந்தொற்று இன்னமும் முற்றாக இல்லாத போதும் இயல்பாகிப் போயிற்று. ஒரு பெருந்தொற்று இவ்வாறுதான் இல்லாது போகும். அதவே வரலாறு.

கீமேயுள்ள கானொளிகளில் :

வரலாற்றில் பெருந் தொற்றுக்கள்

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறையைச் சேர்ந்த மிகச் சாதாரண மக்களின் வாழ்வியல் பேசும் தொடர்..

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.