வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

Read more: முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்? (டெனீஸ்வரன் எதிர் விக்கி: ஓர் இடைக்காலத் தடை)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். 

Read more: தூத்துக்குடி படுகொலைகள்; ஆட்சி அதிகாரம் தரும் போதை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்து வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அண்மையில் கடிதம் எழுதினர். 

Read more: ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் அழுகுரல் மைத்திரிக்கு கேட்குமா?!

“…உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி பெற்ற வாக்குகளை விட அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் அதிகமாகும். அத்தோடு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, தற்போது அவரது அணி பெற்றுள்ள வாக்குகள் குறைவாகும். ஆகவே, புதிய அரசியலமைப்பினை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்…” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: தேர்தல் முடிவுகளோடு சம்பந்தனின் தீர்வுக் கனவு கனலானது!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. 

Read more: நம்பிக்கையில்லாப் பிரேரணை; மைத்திரியும் ரணிலும் சந்தித்த பெரும் தோல்வி!

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், பௌத்த சிங்கள பேரினவாதம் முன்வைப்பதே சட்டமாகவும், ஆட்சியாகவும் மாறிவிட்டது. அந்தக் கட்டங்களில் நின்றுதான் கடந்த காலக் கலவரங்கள், இன ஒடுக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அண்மைய கண்டிக் கலவரமும் அதன் வழி வருவதுதான். அது, ஆரம்பமோ முடிவோ அல்ல. 

Read more: கண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை!

“…மாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவித பிரிவினைக்கும் இடமில்லை…” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று செவ்வாய்க்கிழமை (யூலை 11, 2017) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார். 

Read more: சி.வி.விக்னேஸ்வரன்: மாற்றுத் தலைமையும் இல்லை; எதையும் மாற்றும் தலைமையும் இல்லை!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.