ஈழத் தமிழர்கள் ஆறாக் காயங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எட்டாவது ஆண்டாக அனுஷ்டிக்கின்றார்கள். விடுதலைப் பயணத்திற்காக தொடர்ந்தும் தம்மை அர்ப்பணித்த சமூகமொன்றின் எதிர்காலத்துக்கான பொறுப்பும், கடமையும் எஞ்சியிருக்கும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

Read more: முள்ளிவாய்க்கால் உணர்த்தும் பொறுப்புக்கள்!

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நேற்று வியாழக்கிழமை (மார்ச் 23, 2017) வழங்கியுள்ளது. 

Read more: இலங்கைக்கான கால அவகாசம்; அலைக்கழிக்கப்படும் நீதி!

ஜல்லிக்கட்டினை மீட்டெடுப்பதற்காக தமிழகம் பூராவும் இளைஞர்கள் வீதிக்கு இறங்கியிருக்கின்றார்கள். இரவு பகல் பாராமல், உணவு தூக்கம் மறந்து தமது பாரம்பரிய அடையாளத்தையும் உரிமையையும் மீட்பதற்காக தன்முனைப்புப் பெற்றிருக்கின்றார்கள். அரசியல் கட்சிகளும், தலைவர்களும் புறந்தள்ளப்பட்டு இளைஞர்கள் தலைமையேற்றிருக்கும் போராட்டத்துக்கு பின்னால் பொதுமக்கள் அணி திரண்டிருக்கின்றார்கள். 

Read more: ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டங்கள்; கூட்டுக் கோபத்தின் பெரும் வெடிப்பு!

தமிழக அரசியலில் அதியுச்ச அதிகாரத்தோடு வலம் வந்த தலைவர் ஒருவரின் மறைவுக்குப் பின்னரான தருணங்கள் இராணுவ ஒழுங்குடனும், திட்டமிடலுடனும் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவும், அவர் நோய்வாய்ப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களும் ஆயிரத்தெட்டுக் கேள்விகளால் நிறைந்தவை. அந்தக் கேள்விகள் பெரும்பாலானவற்றுக்கு இன்னமும் பதில்கள் ஏதும் சம்பந்தப்பட்டவர்களினால் வழங்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா ஜெயராம் என்கிற ஆளுமை தற்போது அரங்கில் இல்லை என்பது மாத்திரம் உண்மை. அந்த உண்மையை இயல்புக்கு மாறிய வேகத்துடன் உள்வாங்கி பிரதிபலித்ததில் அரசியல் அதிகாரத்தளம் முக்கியமானது.  

Read more: ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா?!

வடக்கு மாகாணத்தில் தற்போது நான்கு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதி்ல், மூன்று போராட்டங்கள் காணி மீட்பினை அடிப்படையாகக் கொண்டவை. மற்றையது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நீதி கோரும் போராட்டம். அத்தோடு, இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு- கிழக்கிலும், வெளியிலும் பரவலான கவனயீர்ப்புப் போராட்டங்களும் கடந்த நாள்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

Read more: கேப்பாபுலவு; காணி மீட்புப் போராட்டங்களின் நம்பிக்கைக் குறியீடு!

போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு ‘பொதுமன்னிப்பு’ அளிக்கப்படக்கூடாது என்பதை நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியின் இறுதி அறிக்கை வலியுறுத்துகின்றது. 

Read more: ‘பொதுமன்னிப்பு’ கூடாது என்று கூறும் நல்லிணக்கச் செயலணி அறிக்கை சொல்வது என்ன?!

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் பொதுமக்கள் தமது உள்ளக் குமுறல்களை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி வந்து கொட்டித் தீர்த்தனர். அஞ்சலி செலுத்தி அழுது புரண்டனர்.

Read more: மாவீரர் தினத்தை பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கான வெளி !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.