“சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு (இத்தாலிய உணவான) பீட்சாவை சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்...” என்று யாழ். தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்திருக்கின்றார். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக முற்கூட்டியே தடை உத்தரவுகளை நீதிமன்றங்களினூடு பொலிஸார் பெற்று வருகிறார்கள். அது தொடர்பிலான வழக்கு விசாரணையொன்றின் போதே, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் பற்றிய தன்னுடைய எகத்தாளமான கருத்தினை முன்வைத்திருக்கிறார். 

Read more: மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

சில ஆண்டுகளுக்கு முன் வலிகாமம் பகுதியில் பங்குத் தந்தையாக பணிபுரிந்த ஒரு மதகுரு சொன்னார்….. “யாழ்ப்பாணத்தில் அதிகம் தோட்டக் காணிகளைக் கொண்ட ஒரு பிரதேசம் அது. படைத் தரப்பின் ஆக்கிரமிப்புக்குள் அதிகம் தோட்டக் காணிகளை இழந்த ஒரு பிரதேசமும் அது. அப்பிரதேசத்தில் இப்பொழுது விவசாயம் செய்வது அதிகம் முதியவர்களும் நடுத்தர வயதினரும்தான்” என்று. 

Read more: காணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா? (நிலாந்தன்)

அமெரிக்கா ஓர் உலகப் பேரரசு. அது தன் எதிர்காலத்தை நூற்றாண்டுக் கணக்கில் அல்லது ஆயிரமாண்டுக் கணக்கில் திட்டமிடும். எனவே அதன் வெளியுறவுக் கொள்கை; பாதுகாப்பு கொள்கை; பொருளாதாரக் கொள்கை போன்றன நூற்றாண்டுக் கணக்கிலேயே திட்டமிடப்படும். இவ்வாறு நூற்றாண்டுக் கணக்கில் திட்டமிடப்படும் ஒரு வெளியுறவுக் கொள்கையை நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு புதிய தலைவர் எடுத்த எடுப்பில் மாற்றிவிட முடியாது. 

Read more: ஜோ பைடனை இலங்கை எப்படிச் சமாளிக்கும்? (நிலாந்தன்)

20ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை க்கு ஒரு மலையக பிரதிநிதியும் எழு முஸ்லிம் பிரதிநிதிகளும் உதவியிருக்கிறார்கள். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேயே ஆங்காங்கே விமர்சனங்களை காணக்கூடியதாக இருக்கிறது. “முஸ்லிம்கள் ‘தொப்பி பிரட்டிகள்’ என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்” என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கூறியுள்ளார். 

Read more: முஸ்லிம் பிரதிநிதிகள் ஏன் 20ஆவது திருத்தத்தை ஆதரித்தார்கள்? (நிலாந்தன்)

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள, தமிழர் நலன்சார் சக்திகளை ஓரணியில் திரட்டி, பரந்துபட்ட கட்டமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளில், கடந்த சில வாரங்களாக ஈடுபட்டுவந்த அவர், தற்போது வெளிநாடுகளிலுள்ள தமிழர் ஆதரவுச் சக்திகளை இணைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். 

Read more: தமிழர் ஆதரவுக் கட்டமைப்பு பற்றிய மாவையின் ஆர்வம்? (புருஜோத்தமன் தங்கமயில்)

எதிரி அசுர பலத்துடன் இருக்கும் போதுதான், தமிழ்த் தேசிய அரசியல் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி, செயற்பட ஆரம்பிக்கின்றது. எதிரி ஒப்பீட்டளவில் சிறிதாகப் பலமிழந்தால் போதும், மூளைக்கு வேலை கொடுப்பதை நிறுத்திவிட்டு, தமிழ்த் தேசிய அரசியல் தனக்குள் குத்து வெட்டுப்படத் தொடங்கிவிடும். தமிழ்த் தேசிய அரசியல் தோற்றம் பெற்ற காலம் முதல், இதுதான் நிலை. 

Read more: தமிழ்த் தேசிய அரசியலில் ‘மூளை’யின் வகிபாகம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

மனோ கணேசன், தன்னை ஓர் அரசியல்வாதி என்று அழைப்பதைக் காட்டிலும், மனித உரிமைப் போராளி என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்ட விடயங்களுக்காக கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாக போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும் தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மனோ கணேசன் மக்களின் குரலாக அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார். அதனால்தான், தன்னுடைய சொந்தக் கட்சியினராலும், சக வேட்பாளர்களினாலும், சொந்த உறவுகளினாலும் தேர்தல் அரசியலில் கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழ் பேசும் மக்கள் அவரை காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு அவர், சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்த்திருக்கிறார். 

Read more: துமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.