முற்றம்

இன்று அக்டோபர் 15 உலகக் கைகழுவும் நாள். கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பது நோய்த்தடுப்புக்கு ஒரு முக்கிய வழியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2008 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாள் உலகக் கைகழுவும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

கைகளைக் கழுவுவதை வலியுறுத்த ஒரு நாளா எனக் கேட்கத் தோன்றும்.  ஆனால் ஒரு சுகாதாரப் பழக்கத்தினை சட்டமாக நாடுகள்  ஆணையிடும் அளவிற்கு இன்றைய காலச் சூழல் இருக்கிறது என்பதுதான் யதார்த்தம். உலக மக்கள் நாள்தோறும் தங்களது கைகளை நீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கத்தோடு சர்வதேச அளவில் அனுசரிக்கப்படும் இந்நாள், இன்றைய உலகின் நடைமுறையில் முக்கியத்துவம் மிக்க நாளாகும்.

கை கழுவும்பழக்கம் நமது உயிர்களை காக்கும். ஆனால் கை கழுவுதலை  விட்டொழித்தல் என்பதற்கான வார்த்தைச் சொல்லாடலகா வைத்திருப்பவர்கள் நாம். ஆனால் இந்தப் பழக்கத்தை இன்று அவ்வாறு விட்டொழிக்க முடியாது. 

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு தரும் முதல் நடவடிக்கையாகச் சொல்லப்படுவது கை கழுவுதல் ஆகும். ஆனால் இதனை ஆன்மீக நெறியில் அனைத்து மார்க்கங்களும் வலியுறுத்தியே வந்திருக்கின்றன. இன்று அனைத்து நாட்டின் தலைவர்களும் அதனை அறிக்கையாக வெளியிடுகின்றார்கள். சுகாரதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றார்கள். வணிகநிறுவனங்களின் வாயில்களில் காவலர்கள் கட்டாயப்படுத்துகின்றார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ந்தேதி (இன்று) கை கழுவும் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், அதுவும் கைகளை சுத்தமாகக் கழுவுதல் மிக முக்கியம் என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுவதாக அமைகிறது. ஒரு நல்ல பழக்க வழக்கத்தை கடைபிடிக்க இந்த நாள் வருடாந்திர நினைவூட்டலாக இருந்தாலும், இந்த ஆண்டு covid-19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக கை கழுவும் பழக்கம் ஒரு உயிர் காக்கும் காரணியாக மாறியிருப்பதை நிச்சயமாக மறுக்கவே முடியாது. இப்போதைய சூழலில் கை கழுவும் பழக்கம் உயிர் காக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் எனும் உலகளாவிய தொற்றுநோய் நமது கைகளை கழுவுவது மட்டுமன்றி, எவ்வாறு கைகளை கழுவ வேண்டும்? எப்போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்? போன்றவற்றையும் அழுத்தந்திருத்தமாக நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. அதாவது உணவு தயாரிக்கும் முன்பும், தயாரித்த பின்பும், சாப்பிட்ட பின்பும், கழிவறை-குளியலறை பயன்படுத்திய பின்பும், வெளியே ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று வந்த பின்பும், லிப்ட், கதவுகள் போன்றவற்றை தொட்டு பயன்படுத்திய பிறகும், ஏதேனும் பார்சல் உள்ளிட்ட எந்த பொருளையும் தொட்ட பிறகும் நிச்சயமாக நாம் கைகளை சுத்தமாகக் கழுவுதல் என்பது அவசியமானதாகும்.

கைகளையும் சரியான வழியில் கழுவுதல் முக்கியமாகும். கை கழுவுதல் என்பது 5 நிலைகளைக் கொண்டதாகும். விரல்களிடையே நன்றாக தேய்த்தல், உள்ளங்கை மற்றும் கைகளின் பின்புறத்தில் நன்றாக தேய்த்தல், நகங்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்குதல், இறுதியாக நீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகள் வரை கைகளை கழுவுதல் என முறைப்படி கைகளை கழுவ வேண்டும்.

இப்படி கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) வலியுறுத்தி வருகிறது. இன்றைய மற்றும் நாளைய நல்வாழ்வுக்காக அனைத்து தரப்பு மக்களும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதும், அடிக்கடி கைகளை சுத்தமாக பராமரித்து கொள்வதும் அவசியமாகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் நமது கை கழுவும் பழக்கம் என்பது மிகப்பெரிய உயிர்காக்கும் காரணியாக பார்க்கப்படுகிறது. கை கழுவும் பழக்கம் என்பது நமது அன்றாட வாழ்வில் பழக்கமாகி விட்ட விஷயம் ஆகியிருக்கிறது. கை கழுவும் பழக்கம் மூலமாக எந்த நோயும் நம்மை தாக்காமல் பார்த்துக் கொள்வது நமது முக்கிய கடமையாக அமைந்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.