முற்றம்

70 களின் பிற்பகுதி. இடதுசாரிச் சிந்தனைகளில் ஆர்வம் கொண்டிருந்த நேரம். அப்போது அறிமுகமானது "மல்லிகை " இதழ். ஒரு சில இதழ்களைப் படித்ததுமே மல்லிகை ஆசிரியர் 'டொமினிக் ஜீவா' குறித்தும், மல்லிகை குறித்தும் பெரும் பிம்பம் பதிவாகியது.

திருகோணமலையிலிருந்து யாழப்பானம் வந்தபோது, மல்லிகை அலுவலகத்தை தேடிக் கண்டுகொண்டேன். ஒரு சந்து ஒழுங்கைக்குள் இருந்த சிறு அறையின் முன்னே தொங்கிய பெயர்பலகை மல்லிகையின் காரியாலயம் அதுவெனச் சுட்டியது.

ஒருபுறத்தில் ஒருவர் அச்சு எழுத்துக்களைக் கோர்த்தவண்ணமிருக்க, மறு புறத்தில் ஆசிரியர் இருந்தார். அறிமுகம் செய்து கொண்டதும் எழுந்து வந்து பேசினார். நாங்கள் பேசிக் கொண்டது மல்லிகையின் காரியாலய வரவேற்பறையில் அல்ல வாசற்படியில். மல்லிகையின் கொள்ளிட வசதி அவ்வளவுதான்.

மல்லிகையின் மீதான ஆர்வம் குறித்துச் சொன்னேன். பிரமிப்பைச் சொன்னேன். வேலைவாய்ப்பு ஏதும் உண்டா எனக் கேட்டேன். அவர் சிரித்தபடி சொன்னார் " நீர் படித்துப் பிரமித்த மல்லிகையின் கருவறை இவ்வளவும்தான். இதில் என்ன வேலை வாய்ப்பினைத் தரமுடியும் ? . தொடர்ந்து படியுங்கள்.." எனக் கூறி மல்லிகை வெளியீடுகள் இரண்டை தந்தனுப்பினார். அதன் பின்னரே அவரது அர்ப்பணிப்பும், மல்லிகையின் மலர்ச்சியும் குறித்து அதிகம் அறிந்து கொண்டேன். அன்று அவரிடம் கற்றுக் கொண்டது, நல்லதைச் சொல்வதற்கோ செய்வதற்கோ நாம் பெரும் வசதி கொண்டிருக்க வேண்டியதில்லை. எண்ணங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின் போராட்ட காலத்தில் ஒருமுறை சந்தித்த போது, காலச் சூழல் குறித்து அயர்ச்சியுடன் கவலை தெரிவித்தார்.

"திட்டுதல், பாராட்டுதல், எதுவாயினும் நான் கவனிக்கப்படுகின்றேன்" என்பதிலும், "சலூன் தொழிலாகிய நான், அந்தச் சவரச் சாலையைச் சர்வகலாசாலையாக நினைத்தேன், மதித்தேன், படித்தேன், இயங்கினேன்" எனச் சொல்வதிலும் வெளிப்படுவது அவரின் செயல் ஓர்மம் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்து சாதீயக் கட்டுமானத்தின் காரணமாய வலியும், அதற்கு எதிரான கலகக் குரலுமாகும். தோற்றம் முதல் செயல்வரை  அதை எப்போதும் வெளிப்படுத்திக்  கொண்டே இருந்தவர், தன் செயலூக்கத்தை நிரந்தரமாக  நிறுத்திக்கொண்டார்.

இலக்கியச் சிற்றிதழை எழுச்சியாக, இயக்கமாக ஆக்கிய ஒற்றை மனிதன் ஓய்வுகொண்டான். "மல்லிகை ஜீவா " விற்கு அஞ்சலிகள் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

- மலைநாடான்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.