முற்றம்

ஆண்டு தொடங்கி ஒருமாதம் வழிந்தோடினாலும் மனதில் தேவையற்ற பயங்களோடும் சுமைகளுடன் 2வது மாதத்தை தொடர்ந்திருந்தேன்.

கொரோனா அச்சம் சற்று ஓய்திருந்தாலும் நிலத்தடி வீடுகளுக்குள் போர்க்காலத்தில் பதுங்கிருந்ததுபோல் வீடுகளுக்குள் முடக்கிக்போட்ட காலம் அவஸ்தைக்காலம்தான். ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் சற்று சுதந்திரமாக நடமாடும் சூழல் உருவாகியதையடுத்து வாட்ஸ் அப் இல் கண்ட சுவரொட்டி ஒன்று என்னை வெளியே இழுத்துப்போட்டது.

உள்ளூர் நூலக எழுத்தாளர் ஒருவரின் படைப்பாக புதிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழா யாழ் பொது நூலகத்தில் ஏற்பாடு என்பதே அந்த சுவரொட்டி. மன ஆறுதல் படுத்தலின் முதல் கட்டமாக காலையிலே வேறு எதுவித எதிர்மறை சிந்தனைகளுக்கும் வழிவிடாமல் ஒருவழியாக கிளம்பினேன். வெகு நாட்களுக்குப் பின் அரசுப் பேருந்து; சனங்களே இல்லாத காலி இருக்கைகளை கண்களின் வழி நிரப்பி அழைத்துச்சென்று யாழ் மாநகரத்தை அடைந்தது.

பொது நூலகம் செல்லும் வழிக்காக முச்சக்கரவண்டி ஒன்றைப்பிடித்துக்கொண்டேன். அடுத்த 10 நிமிடத்தில் நூலக வாசல்.. நூலக காப்பாளர் வெப்பச்சோதனை கருவி வழி கண்கானித்தார். அடுத்து நிகழ்வு நடக்கும் மண்டபத்திற்கு விரைந்தேன். நினைத்தவழி வந்தசேர்ந்தது இரண்டாவது கட்ட மன ஆறுதல் அது.

அரங்க வாசல் வழி உள்ளே செல்ல சற்று தாமதம்தான்; ஆனால் "பங்கர்" எனும் அந்த புதிய நூல் வெளியீடப்பட்டுக்கொண்டிருந்தது. நூலின் படைப்பாளர் நடுவில் நிற்க பிற அதிதிகள் படை சூழ ரீப்பான் கட்டப்பட்ட புதிய நூல்கள் அனைவரது கைகளிலும் காட்சிதந்தது. புகைப்படவியளாலர்கள் மறைத்துக்கொண்டு சொடுக்கத்தொடங்க மேடையில் அனைவரும் வரிசையாக நின்ற வழியில் அவ்விடம் சற்று நேரம் பரபரப்பாகியது. அரங்கின் பின் இருக்கைகளில் தனியாக மேடையில் நடப்பவைகளை அவதானித்திருந்தேன்.

நூல் நயத்தல் எனும் தலைப்பில் பேச்சு உரை தொடங்க காதுகளை கூர்மையாக்கினேன். ஈழப்போரின் போது வான் தாக்குதல்களை எதிர்கொள்ள அப்போதேல்லாம் 'பங்கர்' எனும் நிலத்தடி வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும். உயிரைப் பாதுகாக்கும் இந்த பங்கர்கள் பல தனித்துவமானக் கதைகளை உள்ளடக்கியதிருந்ததையும் அதனை அனுபவித்தவர்களால் வாய் வழி சொல்லியிருந்த உண்மைக்கதைகளின் தொகுப்பே அந்த முழு நூல் என விளக்கப்பட்டது.

இதன்போது அப்பேச்சாளர் நூலிருந்து ஒரு கதையினை பற்றி அழுத்தமாக விமர்சித்துக்கொண்டிருந்தார். அப்போது எனக்கு முன்வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கண்கலங்கி அழுவதை கவனித்தேன்; போர்ச்சூழலில் நான் வாழவில்லை என்றாலும் கேட்டறிந்திருக்கிறேன். அந்தப்பெண் போர்ச்சூழலில் வாழ்ந்து அனுபவித்தவராக இருந்திருக்கலாம் என்பதை உணர்ந்தேன். அவரைத்தொடர்ந்து கண்களை அசைத்தேன், நிறைய சின்னஞ்சிறியவர்களை பெரியவர்கள் அழைத்து வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

கதை சொல்லல் எனும் இனிமையைபோல் கதை கேட்டலும் இனிமையிலும் இனிமை; கேட்க கேட்க சோர்வுறாதது நமது காதுகள்தான். அப்படி கேட்போர் வழியில் இருப்பதே எனது இயல்பு. பேச்சாளர் நூல் ஆசிரியரின் பாராட்டுதலோடு தன் இருக்கை நோக்கிய வழியில் நடக்க சிறிது இடைவெளி தரப்பட்டது. இலைக்கஞ்சி எனும் நம்மூர் சிற்றூண்டியும் வழங்கப்பட்டது.

வந்தவழியை திரும்பி பார்த்துவிட்டு முன்னோக்கிப்பார்த்துக்கொண்டிருக்க தெரிந்த பல்கலைக்கழக தங்கை ஒருவர் அப்போதுதான் வந்துசேர்ந்தார். நேரில் சந்தித்தவழியில் விசாரிப்புக்கள் தொடர அடுத்த 5 நிமிடத்தில் அடுத்த நிகழ்வு தொடங்கியது.

நமது யாழ் இளைஞர்கள் ஒலிவாங்கிகளை பிடித்துக்கொண்டு குரல் உயர்த்த அனுபவப்பெரியவர்கள் பின் மேடையில் அமர்ந்து இசையமைக்க சுய ஆக்கத்தில் உருவான பாடல்களுக்கு அரங்கம் வழிவிட்டு கேட்கத்தொடங்கியது. நம்மவர்களின் இசைவிருந்து மூன்றாம் கட்ட மன ஆறுதலை எனது இதய வழியை சிறப்பாக்கியது.

இசைவிருந்தையடுத்து நூல் குறித்து சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டவர்; தனது உரையில் "பங்கர்" கதைகளில் சில வேடிக்கை சம்பவங்கள் நிகழ்ந்ததை குறித்துப்பேசினார். சிரிப்பலைகள் எழுந்து ஓய்ந்தன. இறுதியாக நூலின் படைப்பாளர் "வெற்றிச்செல்வி" நன்றியுரைக்காக அழைக்கப்பட்டார். அவரது பேச்சில் உளவியல் ஆதரவான ஆற்றுப்படுத்தல் குறித்து கூறியிருந்தார். தான் கண்முன்னே கண்ட காட்சிகளையும் தனக்கு சொல்லப்பட்ட உண்மைக்கதைகளையுமே "பங்கர்" எனும் இந்த நூலில் தொகுத்திருப்பதாக குறிப்பிட்டார்.

கதைசொல்வதற்கும் கதை கேட்பதற்கும் பல ஆயிரம் வழிகள் இப்போது உருவாகியிருந்தாலும்; மனதால் வாடிய நெஞ்சம் அருகில் அமர்ந்து "ஆம் சொல்லுங்கள்'' என மற்றொரு நெஞ்சம் தொடர்ந்து கேட்பதுபோன்ற உளவியல் ஆறுதலுக்கு வேறு எந்த வழிகளும் பெரிதாக உதவாது என்பதையும் அவரது பேச்சு விவரித்தது.

போர்ப்பயம் எனும் காரணம் நமது குடும்பங்களில் பெரியோர்கள் ஏன் இளையோர்கள் கூட மேல் குறிப்பிட்ட உளவியல் ஆதரவு இன்றி இன்றும் தவிக்கும் பிரிவினைச் சூழல். தற்போது கொரோனாப்பயமும் அதனை மோசமாக்கியது எனலாம்.

எனினும் எனக்கான மன ஆறுதலுக்கான வழிகளில் ஒன்றாக நான் பயன்படுத்திக்கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா சிறப்பிலும் சிறப்பு!

"எங்கட புத்தகம்" எனும் பதிப்பாளர்களின் முயற்சியில் வெளியீடப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வாறன நூல்களுக்கு எமது ஆதரவையும் தந்து ஆறுதல்படுத்திக்கொள்ளலாம்.

பேஸ்புக் பக்கம் நிகழ்வின் காணொளிகளை காண : இணைப்பு

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..