முற்றம்

28 வயதில் கணவனை இழந்திருக்கிறார் அந்தப் பெண். அவருடைய 10 வயது மகன், “கவலைப்படாதீங்கம்மா. இன்னும் பத்தே வருஷத்துல நான் உங்களுக்குச் சம்பாதிச்சுக் கொடுத்துடுவேன்” என்று சொல்லியிருக்கிறான்.

‘பணம் மட்டும்தான் இணை மூலம் கிடைக்கும்னு மகன் நினைச்சிட்டான். ஆனா, பெரியவனானதும் தான் சொன்னது எவ்வளவு தப்புன்னு நினைப்பான். ஆனா, அன்னிக்கு எனக்கு வயசாகியிருக்கும்’என்கிறார் அந்தப் பெண். ஆனால், சித்தார்த் கருணாநிதி மாதிரி மகன்கள் இருந்தால் எந்த வயதிலும் தன் இணையைத் தேடிக்கொள்ளலாம் என்றே எண்ணத் தோன்றுகிறதல்லவா? அதுதான் நடந்திருக்கிறது செல்வி விஷயத்தில்!

தமிழ்நாட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தன் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார் செல்வி. 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கணவர் இறந்துவிட்டார். இரண்டு சிறிய மகன்களுடன் வாழ்க்கை. மகன் சித்தார்த்தின் பள்ளி ஆசிரியர், அம்மாவுக்குத் திருமணம் செய்து வைக்கலாமே என்று கேட்டிருக்கிறார். அந்த வயதில் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கிராமத்தில் மனைவி இறந்த ஆறே மாதங்களில் ஓர் ஆண் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆணுக்கு இருக்கும் உரிமை ஏன் பெண்ணுக்கு இல்லை என்று செல்வி மகன்களிடம் கேட்டிருக்கிறார்.

வீட்டில் அவ்வப்போது இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, அம்மாவுக்குத் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் மகன்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், செல்வியோ திருமணம் செய்துகொண்டால் தன் குழந்தைகளை எப்படி நடத்துவார்களோ என்ற பயத்தில் மறுத்து வந்திருக்கிறார். பிள்ளைகள் பெரியவர்களாகி படிப்பு, வேலை என்று சென்ற பிறகு தனிமை அவரைக் கஷ்டப்படுத்தியிருக்கிறது. திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் வந்திருக்கிறது. ஆனால், அதை மகன்களிடம் சொல்லத் தயங்கியிருக்கிறார். அதைப் புரிந்துகொண்ட மகன்கள், அம்மாவுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

“என் கணவரும் மனைவியை இழந்து 10 வருஷம் ஆனவர். அவருக்கும் 3 குழந்தைகள் இருக்காங்க. எங்க பக்கத்து ஊர்தான். யார் கிட்டேயும் ஷேர் பண்ண முடியாத விஷயங்களை என் கணவரிடம் ஷேர் பண்ண முடியுது. வாழ்க்கை அமைதியா சந்தோஷமா போகுது. என் அழகும் இளமையும் இருக்கும்போதே இந்த முடிவை எடுத்திருக்கலாம்னு இப்ப தோணுது. எங்க ஊர்க்காரங்க, உறவினர்கள் எல்லாம் எதிர்த்தாங்க. இந்த வயசுல இது தேவையான்னு கேட்டாங்க. அவங்க பேசலைன்னா ஒண்ணும் பிரச்னை இல்லைன்னு இருந்துட்டேன். இப்போ எல்லோரும் பேசறாங்க. என்னைப் பார்த்து, கணவனை இழந்த சின்னப் பெண்கள் எல்லாம் திருமணம் செய்துக்க விரும்பறாங்க. அது போதும்” என்று முகம் முழுவதும் புன்னகையோடும் நம்பிக்கையோடும் சொல்கிறார் செல்வி.

அம்மாவுக்குக் கல்யாணம் பண்ணி வைத்ததையும் அதற்காக மகன் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் ‘ரைட் டூ மேரி’ எனும் புத்தகமாக எழுதியிருக்கிறார் மகன் சித்தார்த் கருணாநிதி.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.