முற்றம்

வெஸ்பா ஸ்கூட்டர்கள் இத்தாலியின் மதிப்பார்ந்த அடையாளங்களில் ஒன்று. இத்தாலியில் மட்டுமல்லாது உலகெங்கிலுமுள்ள இளைஞர்களின் விருப்பத்துக்கும் கௌரவத்துக்கும் கனவுக்கும் காதலுக்குமுரிய இரு சக்ரவாகனமாக இருந்தன வெஸ்பா ஸ்கூட்டர்கள். அவை முதல் வடிவம் பெற்றுத்  தயாரிக்கத் தொடங்கி நேற்றுடன் (23.04.2021) 75 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன.

சுசுக்கி, கவசாக்கி, யமாஹா என யப்பானிய மோட்டார் சைக்கிள்களின் மீது பற்றுக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்கள் போல், முன்னைய தலைமுறை இளைஞர்களின் காதல் வாகனம் வெஸ்பா. இதற்கான ரசிகர் கூட்டம் இப்போதும் உலகெங்கிலும் நிறைந்திருக்கிறது.

இத்தாலிய பஜாஜ் மோட்டார் கம்பெனியின் தயாரிப்பில் உருவான இந்த ஸ்கூட்டர்களின் என்ஜின்களை முழுமையாக மூடி மறைத்த இரும்புத் தகட்டிலான மறைப்பு, கால் வைப்பதற்கு இலாவகமான தட்டையான தரைத்தளம், பயனத்தின் போது எதிர்காற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கும், வசதி, எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்குப் பூசப்பட்ட அழகிய வண்ணங்கள் தரும் கவர்ச்சி என்பனவாகும்.

இரண்டாம் உலகப் போரில் விமானக் குண்டுவீச்சால் தரைமட்டமான பஜாஜ் தொழிற்சாலையின் சாம்பல் மேட்டிலிருந்து பிறந்த இந்தஸ் கூட்டர்களுக்கு, வெஸ்பா எனும் இத்தாலிய மொழியிலான பெயர், சூட்டப்பட்டதன் பின்னால் சுவாரசியமான தகவல்கள் உண்டு.

உலகப்போரினால் செயலிழந்த இத்தாலியப் பொருளாதாரம் மற்றும் சாலைகளின் பேரழிவு என்பன மிகுந்திருக்க, ஆட்டோமொபைல் சந்தையின் மறு வளர்ச்சிக்கு உடனடியாக உகந்த சூழ்நிலை இல்லையென்பதை உணர்ந்து கொண்ட, பஜாஜின் நிறுவனர் ரினால்டோ பஜாயோவின் மகன் என்ரிகோ பயாஜியோ, மக்களுக்கு நவீன மற்றும் மலிவு விலையில் போக்குவரத்து முறைக்கான இரு சக்கரவாகனத்தை உருவாக்க விரும்பினார். ஆனால் அழுக்குகள் வெளித் தெரியக் கூடிய மோட்டார் சைக்கிளின் வடிவமைப்பை அவர் விரும்பவில்லை.

அந்த நேரத்தில் உருவானதுதான் சிறியதும் உறுதியானதும், பாதுகாப்பானதுமான இந்த ஸ்கூட்டர்கள். இதன் முழுமையான வடிவமைப்பை முதலில் கண்டபோது, அதன் தோற்றம் மற்றும் இரைச்சல் என்பற்றைக் கண்டு, நிறுவனர் என்ரிகோ பயாஜோ "Sempre una vespa!" "இது ஒரு குளவி போல் தெரிகிறது!" என மகிழ்ச்சியில் கூவினார். அந்த இடத்திலேயே லத்தீன் மற்றும் இத்தாலிய மொழிக் கலப்பிலான 'வெஸ்பா' எனும் பெயரை அதற்குச் சூட்டினார். இந்த ஸ்கூட்டர்களின் இயந்திரங்களின் மெல்லிரைச்சல்கள் குளவிகளின் இரைச்சல் போலக் காணப்படுவது இந்தப் பெயருக்கு மிகப் பொருத்தமாகும்.

ஆரம்பத்தில் இதன் விற்பனை எதிர்பார்த்தளவில் இல்லாத போதும், 1953 ஆம் ஆண்டு வெளிவந்த "ரோமன் ஹாலிடே" திரைப்படத்தில் வந்ததைத் தொடர்ந்து, அது ஹாலிவூட்டின் காதல் வாகனமாகவும், இளைஞர்களின் கனவு வாகனமாகவுமும் இடம்பிடித்தது. கடந்த 75 ஆண்டுகளாக உலோகத்தால் ஆன உறுதியான கட்டமைப்பால், ஜப்பானிய இரு சக்கர வாகனங்களுடனும் உலகச் சந்தையில் போட்டியிட்டு வரும் வெஸ்பாக்கள் ஆரம்பத்தில் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட போதும், தற்போது இந்தியா உட்பட பலநாடுகளிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

'வெஸ்பா' ஹாலிவூட்டில் பிரபலம் பெற்ற பின்னர, ஐரோப்பா முழுவதும் வெஸ்பா கிளப்புகள் தோன்றின. வெஸ்பா முதலில் ஒரு பயன்பாட்டு வாகனமாக கருதப்பட்ட போதும், சுதந்திரம் மற்றும் கற்பனை அடையாளப்படுத்தலுக்கான வாகனமாக மாற்றதம் பெற்றதன் பின் அதன் அசல் வடிவமைப்பில் மேம்பாடுகள் செய்யப்பட்டு புதிய மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வெஸ்பா ஸ்கூட்டர்கள் அன்றும் இன்றும் ஒரு கௌரவ அடையாளமாகவும் கருதப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் சில அரச உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என வலம் வந்த சமூகப் பிரபலங்கள் பலரிடம் வெஸ்பா இருந்தது. எனக்குத் தெரிந்து, எழுத்தாளரும், ஆசிரியருமான, "செங்கையாழியான்" க. குணராஜா அவர்கள் வெஸ்பாவில் வலம் வருவார்.

எனது மாமாவுமும், சித்தப்பாவும் வெஸ்பா வைத்திருந்தார்கள். அவர்கள் காலத்தில் ஹொன்டா மோட்டார் சைக்கிள்கள் பிரபலமாகவிருந்த போதும், அவர்கள் வெஸ்பாவை விரும்பினார்கள். அதற்கு சமூக கெளரவம் மட்டும் காரணமல்ல. அதன் உழைப்பும் பயன்பாடும், முக்கியமானதாகும்.

மாமா வெஸ்பாவில் சுன்னாகம், மருதனார் மடம் சந்தைக்கப் போய் வருகையில், எடுத்து வரும் பொருட்களின் அளவைக் காண்கையில் ஆச்சரியமாக இருக்கும். வெஸ்பாவின் நிறுவனர் என்ரிகோ பயாஜியோ, இரண்டாம் உலக யுத்தம் முடிந்த நிலையில் மக்களுக்கு எதைக் கொடுக்க வேண்டுமென எண்ணினார் என்பதன் சாட்சியமாக இருந்தன அந்தக் காட்சிகள்.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.