கோடம்பாக்கம் Corner

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

அந்த வகையில் டீசீ எனப்படும் டிடெக்டீவ் காமிக்ஸ் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற வார்னெர் பிரதர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம். டீசீ எண்டர்டயின்மென்ட் இன்க் என்ற இந்த பதிப்பக நிறுவனம் நியூயார்க்கை மையமாகக் கொண்டு சூப்பர்மேன், பேட்மேன், வொண்டெர் வுமன், பிளாஷ், கிரீன் லாண்டர்ன், கேப்டன் மார்வெல், கிரீன் யாரோவ், ஜஸ்டிஸ் லீக் என பல புகழ்பெற்ற காமிக்ஸ் வரிசைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. காமிக்ஸ் புத்தக விற்பனையிலும் சாதனை படைத்த இந்தக் கதாபாத்திரங்கள் அனைத்தையும் வார்னர் பிரதர்ஸ் வெள்ளித்திரையில் இந்தியப் பணத்துக்கு 1600 மதிப்பில் படங்களாக தயாரித்து வெளியிட்டதுடன், பட்ஜெட்டைப்போல் ஐந்து மடங்கு வசூலை உலகம் முழுவதும் ஈட்டியிருக்கிறது.

ஹாலிவுட்டின் மற்றொரு காமிக்ஸ் புத்தகச் சந்தை நிறுவனமாக மார்வெல் காமிக்ஸுக்கு மிகப்பெரிய போட்டியாளர் டீசீ காமிக்ஸ். அமெரிக்க காமிக்ஸ் புத்தகச் சந்தையில் இவ்விருநிறுவனங்களும் எண்பது விழுக்காட்டுச் சந்தைப் பங்கினை தங்கள் கசைவசம் வைத்துள்ளனர்.
டீசீ காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் பேட்மேன். உலகம் முழுவதும் தனக்கென ‘கல்ட்’ ரசிகர்களைக் கொண்ட இக்கதாபாத்திரத்தில் மைக்கேல் கீட்டன், ஜார்ஜ் க்ளூனி, க்றிஸ்டியன் பேல், பென் அஃப்ளெக் உள்ளிட்ட பெரும் நடிகர்கள் நடித்துள்ளனர். அதேநேரம் பேட்மேன் போல ஒரு பெண்ணால் சாகசங்கள் செய்யமுடியாத என்று வாசகர்கள் 70-களில் கேள்வி எழுப்பினர். இதனால் பேட்வுமன் கதாபாத்திரத்தை டீசீ உருவாக்கியது. ரசிகர்கள் பேட்மேன் கதாபாத்திரத்துக்கு இணையான பேட்வுமனையும் கொண்டாடித் தீர்த்தனர். வெள்ளித்திரையில் இந்தக் கதாபாத்திரத்துக்கென்று தனியே கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் அந்தத் திரைக்கதைகளை டீசீ சீண்டி கூடப் பார்த்ததில்லை.

ஆனால், தனது வொண்டர் வுமன் கதாபாத்திரத்தை கையில் எடுத்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பேட்வுமன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி டீசீ காமிக்ஸ் 2019-இல் வெப்சீரிஸ் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவு கிடைக்குமா என வெள்ளோட்டம் பார்த்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் பேட்வுமனக்கு வரவேற்பு கொடுத்தனர்.

எனவே பேட்வுமனின் சீசன் 2 சீரீஸையும் தயாரிக்க முன்வந்துவிட்டது டீசீ. இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கு பேட்வுமன் சீசன் 2 படப்பிடிப்பை ஒத்திவைத்துவிட்டது. பெரும்பாலும் வெப் சீரீஸ்களுக்கு சீனிமாவுக்கு இணையாக பணம் செலவழிப்பத்தில்லை. ஆனால் சீசன் 2 தொடருக்கு இந்தியப் பண மதிப்பில் 700 கோடி ரூபாயை செலவிட இருக்கிறது. அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளாய்டின் படுகொலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஹாலிவுட்டில் கருப்பினக் கதாபாத்திரங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை வணிக உத்தியாக கையாள முடிவு செய்திருக்கிறது டீசீ காமிக்ஸ்.

இதையடித்து பேட்வுமன் சீரிஸின் இரண்டாம் சீசனில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜவிசியா லெஸ்லி பேட்வுமன் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்திருக்கிறது. இதற்கான முதல் தோற்றப் போஸ்டரை டீசீ நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்த போஸ்டரில் திருத்தியமைக்கப்பட்ட பேட்வுமன் ஆடை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருப்பதால் டீசீ ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டரை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். ஒன்று மட்டும் நிச்சயம். வொண்டர் வுமன் கதாபாத்திரம் இருக்கும் வரை பேட்வுமன் கதாபாத்திரத்தை திரைப்படமாக்க டீசீ துணியாது.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.