கோடம்பாக்கம் Corner

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ராஜ்கமல் நிறுவனத்துக்காக இயக்கவிருந்த லோகேஷ் கனகராஜ், ரஜினிக்கு கதை பிடிக்காத காரணத்தில், தற்போது ரஜினிக்காக உருவாக்கிய அதே கதையில் கமலை இயக்குகிறார்.

ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு. ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக உள்ளது. விக்ரம் என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படம், ஐரோப்பிய வலைத்தொடரான ‘நார்க்கோஸ்’ அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறோ என அவர்கள் கூறிவருகிறாகள்.

இதுவொரு பக்கம் இருக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான 'மாஸ்டர்' படம் வெளியீட்டுக்கு தயாராக இருந்து கரோனா காரணமாக திரையரங்குகள் திறந்து மக்கள் வர அச்சப்படுவதால் தீபாவளிக்குஇ வெளியாகவில்லை. இதனால் மக்களின் அச்சம் நீங்கியதும் 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'மாஸ்டர்' வெளியாகும் எனத் தெரிகிறது. பாடல்கள் வெளியாகிவிட்டாலும், டீஸர் உள்ளிட்ட எதையுமே படக்குழு வெளியிடவில்லை. பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு இருப்பதால், தீபாவளி தினமான நாளை டீஸரை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, 'மாஸ்டர்' படத்தின் டீஸர் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அப்டேட்டுக்காக புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் தளபதியின் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.