கோடம்பாக்கம் Corner

கோடம்பாக்கத்தில் பலரும் பார்த்து பொறாமைப்படும் ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவன் - நயன்தாராதான். பதிவுத் திருமணம் செய்துகொண்டு உலகுக்குக் காதலர்களாக மட்டும் வாழ்வதாகக் கூறப்படும் இந்தத் தம்பதி சமூக வலைதளத்தில் நெட்டிசன்களுக்கு ருசியானா ஊறுகாய்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவைப் பொறுத்தவரை அவர் அதிகமாக பேட்டியளிக்காமல் இருப்பதினால் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் தப்பித்து வருகிறார்.

அதேபோல் அவரால் படப்பிடிப்பிலும் பிரச்சினை என்று இதுவரையிலும் எந்தவொரு தயாரிப்பாளரோ, இயக்குநரோ சொன்னதில்லை. அவ்வளவு அடக்கமாக நடந்து கொள்வார் நயன்தாரா. செட்டுக்குள் வந்துவிட்டால் இயக்குநர் என்ன சொல்கிறாரோ.. அதைச் செய்துவிட்டு, இருக்கும் இடம் தெரியாமல் நடந்து கொள்வார் . அதில் இயக்குநர்களுக்கு ஏகப் பெருமிதம்.

மூக்குத்தி அம்மன் : விமர்சனம்

ஆனால், தற்போது இயக்குநர்கள் சலித்துக் கொள்வது நயனின் காதலரான விக்னேஷ் சிவனின் இடையூறுகளைத்தான். நயன்தாராவுக்காக கதை கேட்பது.. கால்ஷீட் பார்ப்பது போன்றவைகளை செய்தால்கூட பரவாயில்லை. தப்பில்லை. ஆனால் அதைவிட்டுவிட்டு அதற்கும் மேலாக படத்தின் டெக்னீஷியன்களை முடிவு செய்வதில் தொடங்கி.. அவர்களிடம் இயக்குநருக்கும் மேலாக படம் பற்றி ஆலோசனை சொல்வது.. பேசுவது என்பதாக விக்னேஷ் சிவனின் நடத்தை பல இயக்குநர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. விக்னேஷ் சிவனின் இந்த அட்டகாசத்தை நயந்தாராவின் கவனத்துக்கு யார் எடுத்துச் செல்வது என்று அவரது மேக்-அப் மேன் ராஜுவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரும் நமக்கெதற்கு வம்பு என்று எஸ்கேப் ஆகி வருகிறாராம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.