கோடம்பாக்கம் Corner

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை விமலா ராமன்.

இவர் தற்போது ‘பப்கோவா’ வெப் சீரிஸ் மூலம் மீண்டு நடிக்க வந்துள்ளார். இதன் டீசரை விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டார். அதிபயங்கரமான துப்பாக்கி சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களை பற்றிய நான் லீனியர் கதையைக் கொண்டதுதான் பப்கோவா வெப் சீரியலாம். இது இரண்டு வித்தியாசமான கோணங்களில் இருந்து சொல்லப்படும் ஒரு கதை என இதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஒரு கதை கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்தை பற்றி விசாரிக்கும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை பற்றியது, மற்றொன்று உயிர் பிழைத்த ஒருவர் காணாமல் போன தனது காதலியை தேடும் கதை. பிரபல நடிகை விமலா ராமன் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையா, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'பப்கோவா' வெப் சீரிஸ் லக்ஷ்மி நாராயணா இயக்க, கார்த்தி கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். வரும் 27 முதல் ஜீ5 தளத்தில் 'பப்கோவா' தொடரைப் பார்க்கலாமாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.