இந்தியாவில் தற்போது மக்கள் அதிகமாக விவாதித்து வரும் ஒன்று பெட்ரோல் விலையில் ஏற்பட்டுவரும் கிடுகிடு உயர்வு.
வடமாநிலங்கள் பலவற்றில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலும் இன்று பெட்ரோல் 93 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை வீடியோ மீம் கிரியேட்டர்கள் பல்வேறு விதங்களில் கையாண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மாநாடு திரைப்படத்தின் டீசரை பயன்படுத்தி புதுவிதமான வீடியோ மீம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அதில், விமான நிலையத்திற்கு சிம்பு வேகமாக தனது பைக்கில் வருவது போலவும் பிறகு கடுமையாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலை காரணமாக விமான நிலையத்திலிருந்து மீண்டும் திரும்பும் போது பைக்கை விட்டுவிட்டு வேகமாக தனது கால்களில் ஓடிச் செல்வது போலவும் மாற்றி மீம் உருவாக்கியுள்ளனர்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்