கோடம்பாக்கம் Corner

சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.

அந்த படங்களில் சிறந்த படமாக ‘என்றாவது ஒருநாள்’ படம் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டது. ஏற்கெனவே இப்படம் 33 சர்வதேச விருதுகளை வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. என்றாவது ஒருநாள் படத்தை எழுதி இயக்கி தயாரித்திருந்தார் வெற்றி துரைசாமி. இவர் வேறு யாருமல்ல; அதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சென்னை மேயரின் மகனுமான சைதை துரைசாமியின் மகன். இவரது திருமணத்தில் தல அஜித் மாப்பிள்ளைத் தோழனாகக் கலந்துகொண்டார்.

வெற்றி துரைசாமி இயக்கியிருக்கும் என்றாவது ஒருநாள் படத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். விழாவில் இயக்குநர் வெற்றி துரைசாமிக்கு விருதும் சான்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்டு வெற்றி துரைசாமி பேசும்போது: "இந்தப் படம் சிறந்தபடம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகை என வெவ்வேறு கேட்டகிரியில் இதுவரை 33 விருதுகளைப் பெற்றிருக்கிறது. இப்படி உலகத்திரைப்பட விழாக்களில் 33 சர்வதேச விருதுகளை வென்றிருந்தாலும் நம்ம சென்னையில் நடைபெற்ற திரைப்படவிழாவில் விருது பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவொரு நல்ல மோட்டிவேசன். நல்லபடங்களை தொடர்ந்து எடுப்பதற்கு இந்தவிருது பெரும் முனைப்பாக இருக்கும். அனைவருக்கும் நன்றி" என்றார்

மேலும் என்றாவது ஒருநாள் படத்தின் கேமராமேன் சண்முக சுந்தரத்திற்கு ஸ்பெசல் ஜுரி அவார்ட் கிடைத்தது. இந்த விருது கிடைத்த மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொள்ளும் போது, "இந்தப்படத்தின் கதையோட்டத்தை கெடுக்காத அளவில் கேமராவொர்க் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தின் இயக்குநர் வெற்றி துரைசாமி சார் காணுயிர் ஒளிப்படக் கலைஞர் (wildlife photographer) இருந்ததால் ஒளியின் மொழி அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைத்தார். அந்த வகையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

மேலும் சிறந்த 2-வது படத்துக்கான விருதை, முதியோர்களின் உணர்வுகளை, முடங்கி கிடக்கும் ஆசைகளை மதித்து அரவணைத்து, அவர்களின் பெறுமதி உணர்த்தும் வகையில் நன்னோக்கதிற்காகவும், நேர்த்தியான திரையாக்கத்திற்காகவும் சீயான்கள் படத்துக்கு கிடைத்தது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.