கோடம்பாக்கம் Corner

‘தர்பார்’ படத்துக்குப் பிறகு, ரஜினி நடித்துவரும் படம் ‘அண்ணாத்த’.

சிவா இயக்கும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சன் டிவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது, அங்கு கரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. மேலும், அரசியல் அழுத்தங்கள் காரணமாக ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அரசியலுக்கு எப்போதுமே வரப்போவதில்லை என்று கூறி, அதிலிருந்து வெளியேறிய பின்பு உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்து வந்தார்.

'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப் படக்குழு ஆயத்தமானது. மார்ச் 15-ம் தேதி முதல் ரஜினி தேதிகள் ஒதுக்கியதால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் இடம், ரஜினி வந்து செல்லும் நேரம் உள்ளிட்ட அனைத்தையுமே படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். அவருடைய உடல்நிலைக்குத் தகுந்தவாறு கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அதேபோல், இனி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. சென்னை படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், பொள்ளாச்சியில் சில காட்சிகளைப் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. அனைத்துக் காட்சிகளுமே உடனுக்குடன் எடிட்டிங் செய்யப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து நடிகர்களின் டப்பிங் பணிகள் முடிந்தவுடன், ரஜினி டப்பிங் பேசுவார் எனத் தெரிகிறது. அனைத்துப் பணிகளும் முடிந்து 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.