கோடம்பாக்கம் Corner

முன்னாள் கதாநாயகியான நடிகை ஜெயசித்ரா இயக்குநர் சிகரம் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரது மகன் அம்ரிஷ் பிரபல இசையமைப்பாளர் ஆவார்.

ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கு இசையமைத்திருந்தார். அதன்பின்னர் மேலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜெயசித்ரா சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டனில் உள்ள பென்னி தெருவில் இடம் வாங்கி வீடுகட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் பெயர் கணேஷ்.

ஜெயசித்ராவுக்கு கோடம்பாக்கத்தின் ரங்கராஜபுரத்தில் ஒரு வீடு இருந்தது. அதை வாடகைக்கு விட்டிருந்தார். ஆனால், வாடகைக்கு இருந்தவர்கள் அதை அபகரித்துவிட்டனர். இதனால் சென்னை சிவில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 20 வருடங்களாக நடந்துவந்த வழக்கில் ஜெயசித்ராவுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. வாடகைக்கு இருந்து அபகரித்தவர்கள் தற்போது ஆட்சிகட்டிலில் இருக்கும் திராவிடக் கட்சியில் செல்வாக்குப் படைத்த அரசியல் பிரமுகர் ஆவார்.

அனுபவித்துவந்த சொத்தை எப்படியாவது தனக்கு அபகரித்துவிட வேண்டும் என்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறாரார் என்று பேச்சுக்கள் எழுந்த நிலையிதான் தற்போது இரிடியம் எனும் உலோகம் இருப்பதாகக் கூறி ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் 26 கோடி ரூபாய் மோடி செய்திருப்பதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது சொத்து அபகரிப்பு வழக்கில் வெற்றி பெற்ற ஜெயசித்ராவிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சி என்ற குரல் தமிழ் நாட்டில் எழுந்துள்ளது.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.